"உழவர்கள் பயன்பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படியே, சென்ற ஆண்டு முதல் சன்ன ரக நெல்லுக்கு 2160 ரூபாய், பொது ரக நெல்லுக்கு 2115 ரூபாய் என உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது!
மேலும், ஒரு குவிண்டால் நெல்லுக்கு வருகின்ற காலத்தில் 2500 ரூபாய் வழங்குவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்"என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி சட்டசபையியில் உறுதியளித்தார்.
2,போகி பண்டிகை கொண்டாட்டம்
தமிழகத்தில் இன்று போகி பண்டிகை கொண்டாட்டம்
சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக், டயர்களை எரிக்க வேண்டாம் என தமிழக அரசு பொதுமக்களை கேட்டுக் கொண்டது
பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக், டயர்கள், டியூப்கள் போன்ற கழிவுப்பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
3,சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை தொடங்கினார் முதல்வர்
தமிழ்மாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று சென்னை தீவு திடலில் ,தமிழ் மண்ணின் கலைகளை களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் 40 வகையான கலைகளுடன் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்தப்படும் "சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா"-வை தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இதில் பல அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
4,மதுரையில் ஜல்லிக்கட்டிற்காக 9,699 காளைகள் ஆன்லைன் பதிவு
மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரம், 16-ஆம் தேதி பாலமேடு, 17-ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 9,699 காளைகளும், 5,399 மாடுபிடி வீரர்களும் தங்கள் பங்கேற்பைப் பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான மூன்று நாள் ஆன்லைன் பதிவு வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. சோதனையை முடித்த பின்னரே, தகுதியான பங்கேற்பாளர்களுக்கு டோக்கன்கள் உருவாக்கப்படும், காளைகள் அல்லது அடக்குபவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பங்கேற்பதற்காக தங்கள் டோக்கன்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
5,தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது
தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும், போட்டித் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத் தாள் கட்டாயமாக்க வழிவகுக்கும் மசோதாவை தமிழ்நாடு அரசு இன்று சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றியது.
6,பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!
ஒரு கிலோ ரூ 1500-க்கு விற்ற மல்லிகைப் பூ தற்போது கிலோ ரூ. 3000 எனும் நிலைக்கும், ரூ.700-க்கு விற்ற முல்லைப்பூ, ஜாதிப்பூ தற்போது 1500-க்கும் விற்கப்படுகிறது. இதே போல ஒவ்வொரு பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. குமரி மாவட்டம் மட்டுமல்லாது, கரூர் மாவட்டம், ப. வேலூர் வட்டாரப் பகுதி, திருப்பூர் பகுதி ஆகிய பிற பகுதிகளிலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த வட்டாரப் பகுதிகளில் விளையும் பூக்களை ஏலச்சந்தைக்குக் கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர்.
மல்லிப்பூ, பிச்சிப்பூ ஆகியவற்றைத் தொடர்ந்து, முல்லைப் பூ, சம்பங்கி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா, துளசிக் கட்டு ஆகியனவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
7,குடகனாரு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம்,குடகனாரு அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாசன நிலங்களுக்கு 18.01.2023 முதல் 03.03.2023 வரை 45 நாட்களுக்கு 264.38 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.இதனால்,திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 9000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
8,"புகையில்லா போகி " கொண்டாடும் ஈரோடு மாநகராட்சி
ஈரோடு மாநகராட்சியில் புகையில்லா போகி கொண்டாடப்பட்டுவருகிறது ,காற்று மாசு கட்டுப்படுத்தலை விழிப்புணர்வு செய்யும் விதமாக இது கொண்டாட படுகிறது.
பழைய பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் ஆகியனவற்றை மாநகராட்சி சார்பாக வரும் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்துகின்றது.
9,இன்றைய காய்கறி விலை
தக்காளி-ரூ.17
உருளைக்கிழங்ங்கு -ரூ.30
பெரிய வெங்காயம் -ரூ.30
சிறிய வெங்காயம் -ரூ.80
வெண்டைக்காய் -ரூ.100
பச்சை மிளகாய் -ரூ.30
தேங்காய் -ரூ.25
கேரட் -ரூ.30
காலிபிளவர் -ரூ.30
கத்திரிக்காய் -ரூ.35
பீட்ரூட் -ரூ.30
10,வானிலை அறிக்கை
தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ கூடும்.
ஓரிரு இடங்களில் அதிகாலை வேலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். மீனவர்களுக்காக எச்சரிக்கை எதுவுமில்லை.
மேலும் படிக்க:
Share your comments