தமிழகத்தில் விவசாயத்துக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப்1, குரூப்2 என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, குரூப் 1, குரூப் 2 பிரிவில் இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8:30 மணியில் இருந்து பிற்பகல் 2:30 மணி வரை 6 மணி நேரமும், இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலும், குரூப்2 பகுதிக்கு இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
2.டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் நேரம் அறிவிப்பு!
டெல்டா மாவட்டங்களிலும், விவசாயத்துக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரத்திற்கு, குரூப் 1 குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. குரூப்1 பகுதிக்கு காலை9 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை, இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும். குரூப் 2 பகுதிக்கு பகுதிக்கு பகல் நேரத்தில் காலை 9:30 மணியில் இருந்து பிற்பகல் 3:30 மணி வரை, இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும், என்பது குறிப்பிடதக்கது.
3.பயறுவகைப் பயிர்களில் பூக்கள் உதிர்வதை தடுக்க பயிர் வளர்ச்சி ஊக்கியை தெளிப்பீர்
பயறுவகைப் பயிர்கள் பூக்கும்பொழுது ஏக்கருக்கு 40 கிராம் நாப்தலின் அசிட்டிக் ஆசிட் 1 லிட்டர் நீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். பயன்படுத்தும் நீர் உப்பு நீராக இல்லாமல் நல்ல நீராக இருப்பதை உறுதி செய்வது அவசியம். இம்முறையில் பூக்கள் உதிர்வது குறைந்து மகசூல் அதிகரிக்கும். மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகுங்கள்.
4.ரேஷன் கடைகளில் இலவச கேழ்வரகு: மத்திய அரசிடம் உதவி கேட்கும் தமிழக அரசு!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில், அதன் மூலம் பல ஏழை எளிய குடும்பங்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக சிறு தானியங்கள் வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி சமீபத்தில் தெரிவித்தார். அதன் படி முதற்கட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஒரு குடும்ப அட்டைக்கு 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த மாவட்டங்களை சேர்த்து தமிழகம் முழுவதும் கொடுக்க மொத்தம் 2.23கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 1 கிலோ கொடுக்க ஆண்டுக்கு 2.67 லட்சம் டன் தேவைப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் ஏக்கர் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது. மீதம் தேவைப்படும் கேழ்வரகை இந்திய உணவு கழகத்திடம் இருந்து கொள்முதல் செய்ய தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த தொழில் தொடங்க, அரசு 85% மானியம் வழங்குகிறது
5.கையில் கரும்புடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வானூர், காட்ராம்பாக்கம், புதுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் விளைவிக்கும் கரும்புகளை தொலைத்தூர சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் இரண்டு வருடமாக ஆலை மூடப்பட்டுள்ளதால் செங்கல்பட்டு மாவட்டம் பட்டாளத்திற்கு கரும்புகள் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் படாளம் கொண்டு செல்லப்படும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், வாகன வாடகை அதிகமாக செலவாகுவதாகவும்,இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறி, விழுப்புரம் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்ப நடவடிக்கை எடுக்ககோரி கரும்பு விவசாயிகள் கையில் கரும்புகளை ஏந்தி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
6.இன்று புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்
புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட சில தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.மார்ச் 13ம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் தராத நிலையில், இன்று மாலைக்குள் ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க:
தேனீ உங்கள் நண்பன், எப்படி தெரியுமா? விளக்கும் வேளாண் மாணவிகள்
கரும்பு செட் சிகிச்சை என்பது சிவப்பு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த உதவும்
Share your comments