ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு புகார்கள் காரணமாக வழக்குகள் தொடரப்பட்டு, அவை முடிவிற்கு வராமல் நிலுவையில் பல காலமாக உள்ளது. இதற்காக சட்ட நிபுணர்களை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவை வழக்குகள்
நாடு முழுவதும் 67 லட்சம் பயனர்கள் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காரணமாக உள்ள புகார்களை நிவர்த்தி செய்வதற்காக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் ஆயிரக்கணக்கில் நிலுவையில் முடிக்கப்படாமல் இருந்து வருகிறது.
EPFO சட்ட நிபுணர்கள்
இந்த வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக 35 சட்ட நிபுணர்களை நியமிக்க உள்ளதாக EPFO அறிவித்துள்ளது. சட்ட நிபுணர்கள் முதலில் 11 மாதங்களுக்கு மட்டுமே நியமிக்கப்பட உள்ளனர்.
அதை தொடர்ந்து அவர்களின் பணி திறன் அடிப்படையில் 3 ஆண்டுகள் வரை நீடிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
PF கணக்கில் வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? முழு விவரம் இதோ!
Post Office: தினசரி 417 ரூபாய் முதலீடு செய்தால் 1 கோடி ரூபாய் வருமானம்!
Share your comments