பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து வகையான உணவு பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி, வரும் திங்கள் (ஜூலை 18 ) முதல் அமலுக்கு வருகிறது. ஜூன் 28, 29 ஆம் தேதிகளில் சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பேக்கிங் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.
ஜிஎஸ்டி (GST)
இந்நிலையில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது : ஜி.எஸ்.டி கவுன்சிலில் எடுத்த முடிவுகளின்படி, இதுவரை விலக்கு அளிக்கப்பட்ட முன்னரே பேக்கிங் செய்யப்பட்ட தயிர், மோர், பன்னீர் மற்றும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு, வரும் 18 ஆம் தேதி முதல் 5 சதவீதம் ஜி.எஸ்.டி அமலுக்கு வருகிறது.
வாடிக்கையாளர்களிடம், வங்கிகள் விநியோகிக்கும் காசோலை புத்தக கட்டணத்துக்கு, 18 சதவீதம் வரி விதிக்கப்படும். மருத்துவமனைகளில் ( ஐ.சி.,யூ தவிர ) நாளொன்றுக்கு அறை
- வாடகை ரூ.5,000க்கு மேல் வசூலிக்கப்பட்டால் இனி அதற்கும் 18 சதவீத வரி விதிக்கப்படும்.
- எல்.இ.டி பல்புகள் உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு வரி, 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்கிறது.
- ஸ்டேஷனரி பொருட்களுக்கான வரியும் 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
வரி குறையும் பொருட்கள் (Tax-deductible items)
- தனியார் நிறுவனங்களிடம் இருந்து ராணுவ தேவைகளுக்கு கொள்முதல் செய்யப்படும், ராணுவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- ரோப் கார் பயணத்துக்கு விதிக்கப்பட்ட வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- செயற்கை கால், உபகரணங்கள் போன்றவற்றிற்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம், லாட்டரி, குதிரை பந்தயம் போன்றவற்றிற்கு 28 சதவீத வரி விதிப்பது தொடர்பான முடிவை, ஆகஸ்ட் மாதம் நடக்கும் ஜி.எஸ்.டி கவுன்சில் விவாதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மேலும் படிக்க
உயர்ந்து வரும் அரிசி விலை: ஜிஎஸ்டி வரியால் மேலும் உயர வாய்ப்பு!
தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!
Share your comments