1.அரசு விரைவு பஸ்களில் 50 சதவீத கட்டண சலுகை
5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால் அரசு விரைவு பஸ்களில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் மாதம் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால் 6 ஆவது முறை முன்பதிவு செய்து பயணம் செய்யும் போது, இந்த சலுகை அவர்களுக்கு கிடைக்கும்.
2,ஆபரணத்தங்கம் விலை ரூ.160 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்தசில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44 ஆயிரத்து 520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5 ஆயிரத்து 565க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் அதிகரித்து உள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3,முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையானது.
கடந்த மாதத்தில் முருங்கைக்காயின் விலை ரூ.200-க்கும் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது அதன் விலை படிப்படியாக குறைந்து ரூ.40-ஐ தொட்டிருக்கிறது. முருங்கைக்காய் சீசன் தொடங்கி இருப்பதால் அதன் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
4,ரூ.12.79 கோடியில் புதிய கால்வாய்கள்
நீர்வளத்துறை அறிவித்த மானியாக் கோரிக்கையில் ரூ.12.79 கோடியில் புதிய கால்வாய்கள் அமைக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தினால் தென்காசி, விருதுநகர், மாவட்டங்களில் 8135.48 ஏக்கர் நிலங்கள்
5,ரூ.285 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய பாசனத்திட்டங்கள்
நீர்வளத்துறை அறிவித்த மானியாக் கோரிக்கையில் ரூ.285 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய பாசனத்திட்டங்கள் அமைக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தினால் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி , மதுரை ஆகிய மண்டலங்களில் உள்ள பாசன அமைப்புகள் புனரமைக்கப்படும்
6,நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவிங்கி புலி 4 குட்டிகளை ஈன்றது.
நமீபியாவில் இருந்து மத்தியப்பிரதேச மாநிலம் குனோ உயிரியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட சிவிங்கி புலி 4 குட்டிகளை ஈன்றது..
சிவிங்கி புலி குட்டிகளின் வீடியோவை வெளியிட்டார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்..இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7,2018-19 நிதியாண்டிற்கான தங்க விருதையும், 2019-20 நிதியாண்டிற்கான வெள்ளி விருதையும், ஏற்றுமதி சிறப்பு விருதுகளில் ஒரு நட்சத்திர ஏற்றுமதி இல்லப் பிரிவில் IIL பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியை இந்திய ஏற்றுமதி அமைப்பு கூட்டமைப்பு (FIEO) மும்பையில் ஏற்பாடு செய்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல். திரு. ராஜேஷ் அகர்வால், mtiil இந்தியா மற்றும் திரு. ஸ்ரீகாந்த் சத்வே, சர்வதேச வணிகத் தலைவர் ஆகியோருக்கு விருதை வழங்கினார்.
8,iccoa வின் செயல் இயக்குநர் மனோஜ் குமார் மேனன், கிருஷி ஜாக்ரானில் கலந்து கொண்டு, இயற்கை மற்றும் நிலையான விவசாயம் குறித்த விரிவான தகவல்களை அளித்தார்.
ICCOA நிர்வாக இயக்குனர் மனோஜ் குமார் மேனன் நேற்று கிருஷி ஜாக்ரானில் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டார். மனோஜ் குமார் மேனன் இயற்கை, இயற்கை மற்றும் நிலையான விவசாயம் பற்றிய விரிவான தகவல்களை வழங்கினார். இந்நிகழ்வில் கிருஷி ஜாக்ரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.சி.டொமினிக் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் விவசாய ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க
அரசு பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு 50% கட்டணச்சலுகை – விபரம் உள்ளே!
இனி Google Pay, Paytm மூலமா பணம் அனுப்புனா Extra காசு பிடிப்பாங்களா? உண்மை என்ன..
Share your comments