1. செய்திகள்

2024-ல் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு- ஜல் ஜீவன் திட்டம் உறுதி!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
jal jeevan mission

Image credit: Deccan herald

ஜல் ஜீவன் திட்டம் மூலம் 2020-21ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 55 லட்சம் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வீட்டுக் குழாய் இணைப்புகள் மூலம் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 2019 ஆண்டு மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் திட்டம் (jal jeevan mission) தொடங்கப்பட்டது.

2020-21ஆம் ஆண்டில் 55 லட்சம் குழாய் இணைப்புகள்

இதற்கான பணிகளை விரைவாகச் செய்து முடிப்பதில் மாநிலங்கள் போட்டியிட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 2019 இல் தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் அமல்படுத்தப்பட்ட 7 மாதங்களில், சுமார் 85 லட்சம் கிராமப்புறக் குடும்பங்களுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கோவிட்-19 (Covid-19) தொற்று நோய்களுக்கு மத்தியில், முதல் ஊரடங்கிற்கு முன்னரே, 2020-21ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 55 லட்சம் குழாய் இணைப்புகள் (55 lakh tap connections) வழங்கப்பட்டுள்ளன. இப்படியாக, தினமும் சுமார் 1 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்படுகின்றன என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

4.60 கோடி குழாய் இனைப்புகள்

இன்றைய நிலவரப்படி, பீகார், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், இமாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 7 மாநிலங்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வீட்டு குழாய் இணைப்புகள் இலக்கில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை அடைந்துள்ளன.
தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, மணிப்பூர் போன்ற மாநிலங்களும் இதே காலகட்டத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.

நாட்டில் உள்ள 18.93 கோடி கிராமப்புற வீடுகளில், 4.60 கோடி (24.30%) குடும்பங்களுக்கு ஏற்கனவே குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து குழாய் இணைப்புகளின் செயல்பாட்டை உறுதிசெய்யும் போது மீதமுள்ள 14.33 கோடி குடும்பங்களுக்கான இணைப்பையும் காலவரையறைக்கு உட்படுத்துவதே இதன் நோக்கம்.

2020-21இல் ஜல் ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்த 23,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 15 வது நிதி ஆணையத்தில் 50 சதவீத கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது, அதாவது 30,375 கோடி ரூபாய் நீர்வழங்கல் மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் 50 சதவீதம் ஏற்கனவே மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் இயக்கம்

2024-க்கும் அனைத்து வீடுகளிலும் குழாய் இனைப்பு

பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் 2024க்கு முன்னர் இந்த இயக்கத்தின் இலக்கை அடைய உறுதியளித்துள்ளன. பீகார், கோவா, புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆகியவை முழுமையான இணைப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளன.

இதேபோல் 2022ஆம் ஆண்டில் குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக், மேகாலயா, பஞ்சாப், சிக்கிம் மற்றும் உத்தரப்பிரதேச 100 சதவீத இணைப்பை வழங்கி முடிக்கத் திட்டமிட்டுள்ளன. அதே போல அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகியவை 2023ஆம் ஆண்டில் முழு இணைப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், ஆந்திரா, அசாம், ஜார்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் 2024க்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க.... 

தோட்டக்கலை துறையின் ஊக்கத்தொகை திட்டம்! - ஹெக்டேருக்கு ரூ.2,500/- எப்படி பெறலாம்?

இன்சுலின் செடி எனப்படும் சர்க்கரைக் கொல்லி சாகுபடி பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க...!

ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை - கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு!

English Summary: 55 lakh tap connections provided since Unlock-1 under Jal Jeevan Mission

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.