1. செய்திகள்

ஆதார் தொடர்பான சிக்கல்களை தீர்க்க டுவிட்டர் சேவையில் UIDAI !!

Daisy Rose Mary
Daisy Rose Mary
UIDAI starts twitter service

ஆதார் தொடர்பான சிக்கல்களை தீர்க்க இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI பொதுமக்களின் வசதிக்காக ட்விட்டர் சேவையை தொடங்கியுள்ளது.

ஆதார் அட்டை (AADHAR CARD) என்பது தற்போது அனைத்து தேவைகளுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு முதல் அரசு மானியம் வழங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது.இந்நிலையில், ஆதார் அட்டையின் முக்கியத்துவம் கருதி பயனர்களின் வசதிக்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் டுவிட்டர் (UIDAI On twitter) சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு பதில் அளிக்கிறது.

டுவிட்டர் சேவையில் UIDAI

ஆதார் அட்டை தொடர்பான சிக்கல்களை தீர்க்க இனி நீங்கள் டுவிட்டர் சேவயை நாடலாம், அதில் @UIDAI மற்றும் @Aadhaar_Care இன் டுவிட்டர் பக்கத்தில் ஆதார் தொடர்பான எந்த ஒரு சிக்கல்கள குறித்தும் டுவீட் (Tweet) செய்யலாம். அல்லது உங்கள் ஆதார் மண்டல அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் (regional Aadhar office) பதிவு செய்யலாம்.

UIDAI தற்போது அனைத்து வசதிகளையும் ஆன்லைனில் வழங்குகிறது. ஆதார் அட்டையில் பெயரை மாற்றுவது முதல் தொலைபேசி எண் மாற்றுவது அல்லது வீட்டு முகவரியை மாற்றுவது போன்ற அனைத்து தீர்வுகளையும் ஆன்லைனில் பெறலாம். மேலும் ஆதார் அட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் உங்களின் புகார்களை பதிவு செய்யலாம்.
UIDAI-யின் இலவச வாடிக்கையாளர் சேவை மையத்தின் எண் 1947யை பயன்படுத்தியும் உங்கள் சந்தேகங்களை நீங்கள் தீர்த்துக்கொள்ள முடியும் அல்லது help@uidai.gov.inக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமும் தகவல்களைப் பெறலாம்.

ஆதார் சாட்-போட் (Aadhar chat bot)

2024-ல் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு
https://tamil.krishijagran.com/news/55-lakh-tap-connections-provided-since-unlock-1-under-jal-jeevan-mission/இந்த ஆண்டு ஜனவரியில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)ஆதார் சாட்-போட்டை (Chat bot) அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மக்களின் கேள்விகளுக்கு ஆதார் சாட்-போட்டில் பதிலளிக்கப்படுகிறது. ஆதார் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பயனர்கள் உடனடியாக பதிலைப் பெறலாம். சாட்போட் (Chat bot) என்பது ஒரு மென்பொருள் பயன்பாடு ஆகும். இது செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.

கடந்த ஜூன் மாதம் முதல் ஆதார் அட்டை புதுப்பிப்பு பணிகளை UIDAI நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறது. ஆதார் அட்டை பயனாளர்களின் இருப்பிடம், பயோமெட்ரிக் தகவல்கள் (biometric information)உள்ளிட்டவை தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 17000 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... 

ஜன் தன் திட்டம் குறித்து அறிந்து கொள்ள மாநில அளவிலான இலவச உதவி என்கள்!

2024-ல் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு

English Summary: UIDAI has started the Twitter service to Answer the aadhar card holders

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.