ஏழு கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. நிறைவு பெற்ற ஏழாம் கட்ட தேர்தலில் 62 % வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குகள் என்னும் பணி மே 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை அளவில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.
மக்களவை தேர்தலானது கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 தேதி (நேற்று) வரை நடை பெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடந்து வந்தது. இந்த தேர்தலில் 10 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்க பட்டுள்ளனர்.
ஏழாம் கட்ட தேர்தலானது பஞ்சாப் (13/13), சண்டிகர் (1/1), மத்திய பிரதேசம் (8/29), ஜார்கண்ட் (3/14), மேற்கு வங்கம் (9/42), உத்திர பிரதேசம் (13/80), பீகார் (8/40), மற்றும் ஹிமாச்சல் பிரதேசம்(4/4), போன்ற தொகுதிகளுக்கு நடைபெற்றது.
59 தொகுதிகளில் 918 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 10 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக இருந்தனர். இதில் 3,435 பேர் மூன்றாம் பாலினத்தவராவர்.
இறுதி கட்ட வாக்கு பதிவு நடைபெற்ற தொகுதிகளில் பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிட தக்கது. நேற்று மாலை வரை 62% வாக்குகள் பதிவாகி இருந்தன என தேர்தல் அதிகாரி கூறினார். வாக்கு இயந்திரங்கள் வாக்குகள் என்னும் மையத்திற்கு எடுத்து செல்லபட்டு வரும் மே 23 தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்க படும் என்றார்.
நேற்று மாலை முதல் தொலைக்காட்சிகள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் கருத்து கணிப்புகளை வெளியீட்டு வருகின்றன. பெரும்பாலான ஊடகங்களின் கருத்து கணிப்புகள், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு சாதகமாகவே உள்ளது.
பாஜக அரசு பலத்த பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தகவல்கள் வருகின்றன. கருத்து கணிப்புகள் யாவும் எதிர் கட்சிகளுக்கு எதிராகவே உள்ளன. எனினும் மே 23 தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
Anitha Jegadeesan
Share your comments