1,மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்: ரூ. 4.50 கோடி ஒதுக்கீடு!
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாதம் ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பேரவையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 13 புதிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.
அதன் படி ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கு 500 பயனாளிகளுக்கு ரூ. 4.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்த ரூ. 7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2,ஒரு கேண்டி பருத்தி 75,000 வரை போகலாம்
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு கேண்டி(355 கிலோ) பருத்தியின் விலை ரூபாய் ₹75,000 ஐ எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் ஏற்படும் பருத்தியின் தேவை மற்றும் நடப்பு பருவத்தில் பருத்தி உற்பத்தி குறைந்ததன் விளைவாக விலையேற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பருத்தி சங்கத்தின் தலைவர் அதுல் கனாத்ரா கூறுகையில், தற்போது பருத்தி விலை கேண்டி ஒன்றுக்கு ₹62,500–63,000 வரை வர்த்தகம் செய்யப்படுகிறது மற்றும் வரத்து குறைந்து வருவதால் வரும் நாட்களில் விலையானது சீராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பருத்தி விலை ஜூன்-ஜூலை மாதங்களில் ஒரு கேண்டி(355 கிலோ) ₹70,000-75,000 ரூபாயினைத் தொடும் என்றார்.
3,நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற CPCL
நாகூர் பட்டினச்சேரி கரையோரம் செல்லும் CPCL எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான பத்தாண்டுகள் பழமையான எண்ணெய் குழாயின் ஒரு பகுதி கடந்த சில ஆண்டுகளாக செயலிழந்துள்ளது. அக்குழாயில் மார்ச் மாதத்தில் மட்டும் குறைந்தது நான்கு முறை 'எஞ்சிய எண்ணெய்' (residual oil) கசிந்தது. அப்பகுதியில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பற்ற பைப் லைனை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய நிலையில், CPCL தங்கள் பைப்லைனை முழுவதுமாக அகற்ற ஒப்புக்கொண்டு 850 மீட்டர் பகுதியை அகற்றியது. இதனை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேசிய பசுமை தீர்ப்பாயம் குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது.
4.இன்றைய தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 45,320க்கு விற்பனை
ஒரு கிராம் தங்கம் ரூ. 5,665க்கு விற்பனை
5. கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை வார சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது .ரூ.1 கோடி வரை விற்பனை நடந்ததாக விற்பனையாளர்கள் தகவல்.
6.இன்று உலகப் பாரம்பரிய தினம்
உலகப் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில், இன்று உலகப் பாரம்பரிய தினம் கடைபிடிப்பு..
மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் இன்று இலவசமாக சுற்றிப் பார்க்க அனுமதி...
7.கோடை வெயில் பாதிப்பு தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
பணி நேரத்தை மாற்றியமைப்பது, பணி இடங்களில் குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தல்
கட்டுமான தொழிலாளர்களை வெப்ப நோய்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்
மேலும் படிக்க
எண்ணெய் கசிவு விவகாரம்- மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற CPCL
ஒரு கேண்டி பருத்தி 75,000 வரை போகலாம்- ஆனாலும் ஒரு டிவிஸ்ட் இருக்கே..
Share your comments