நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். முன்னதாக அவர் காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதை தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிரதமர் மோடி தேசிய கொடியேற்றியபோது வானில் ஹெ லிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. தொடர்ந்து அவர் சுதந்திரதின உரையாற்றி வருகிறார்.
சுதந்திர தினம் (Independence day)
மாநிலங்களில் முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைப்பர். மக்களும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி எழுச்சியுடன் கொண்டாடுகின்றனர். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை இன்று கோலாகலமாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக கடந்த சில மாதங்களாகவே பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய - மாநில அரசுகள் ஏற்பாடு செய்திருந்தன. சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளதால், மத்தியில் ஆளும் பா.ஜ., இதை விமரிசையாக கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. கடந்த மாதம் 'மன் கீ பாத்' என்ற தன் ரேடியோ உரையின்போது, 'வீடு தோறும் தேசியக் கொடியை ஏற்றி, நாட்டின் விடுதலைக்கு போராடியவர்களை கவுரவிப்போம்' என, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தேசியக்கொடி (National Flag)
சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என, பல்வேறு தரப்பினரும் தேசியக் கொடியை தங்கள் சுயவிபர படமாக வைத்தனர். இதற்கிடையே, பிரதமரின் ரேடியோ உரையின்படி, நாடு முழுதும் 20 கோடி வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விடுவதற்கான ஏற்பாடுகளிலும் பா.ஜ., இறங்கியது.
தேசப்பற்று உள்ள மக்களும், தங்களுடைய வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து எழுச்சியுடன், சுதந்திர தினத்தை வரவேற்றுள்ளனர். நாடு முழுதும் உள்ள அணைகள், வரலாற்று, புராதன சின்னங்கள் ஆகியவை மூவர்ண ஒளிவிளக்கில் ஜொலிக்கின்றன.
இந்நிலையில், நாட்டின், 75வது சுதந்திரம் இன்று (ஆக., 15) நாடு முழுதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுடில்லியில் உள்ள செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் . முப்படைகள் மற்றும் டில்லி போலீசார் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார். அதைத் தொடர்ந்து நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றினார்.
நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்றதில் இருந்து தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக இன்று செங்கோட்டையில் கொடி ஏற்றுகிறார். மேலும், மாநில தலைநகர்களில் அந்தந்த மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவர்.
சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் வகுத்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. அதனால் நாடு முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
ஆசியாவில் வேகமாக வளரும் நாடு இந்தியா: மோர்கன் ஸ்டான்லி!
வீட்டில் தேசியக்கொடி ஏற்றுங்கள்: மத்திய அரசின் சான்றிதழைப் பெறுங்கள்!
Share your comments