1. செய்திகள்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் HRA-வை அதிகரிக்க மத்திய அரசு முடிவு? விவரங்கள் உள்ளே!

Poonguzhali R
Poonguzhali R
Decides to Increase HRA!

7th Pay Commission: மோடி தலைமையிலான அரசு சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) உயர்த்தியது, அதன் பிறகு HRA உயர்த்தப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.

கடந்த ஜூலை 2021-இல் HRA அதிகரிக்கப்பட்டது
கடந்த ஆண்டு ஜூலை மாதம் HRA-ஐ உயர்த்தியது. அப்போது HRA உயர்த்தப்பட்ட போது DA 25% சதவீதத்தில் இருந்தது. தற்போது அரசு அகவிலைப்படியை (DA) 28% சதவீதமாக உயர்த்தி இருந்தது. இப்போது அதே போல மத்திய அரசு DA-ஐ உயர்த்தியுள்ளதால், HRA-ஐயும் உயர்த்த வாய்ப்பு இருக்கின்றது.

HRA உயர்த்தப்பட்டால், பல்வேறு துறைகளில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயரும்.

HRA எவ்வளவு அதிகரிக்கும்?
ஊடக அறிக்கையின்படி, அரசு ஊழியர்களின் HRA விரைவில் 3% சதவீதமாக அதிகரிக்கலாம் என கணிக்கப்படுகிறது.

X வகை நகரங்களில் உள்ள பணியாளர்கள் தங்கள் HRA வில் 3% உயர்வைக் காணலாம். அதே நேரத்தில் Y வகை நகரங்களில் 2% உயர்வைக் காணலாம். இது தவிர, Z பிரிவு நகரங்களில் உள்ள ஊழியர்களின் HRA 1% வரை அதிகரிக்கலாம்.
அதாவது அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை HRA 27% லிருந்து 30% ஆக உயரும்.

கடந்த மாதம் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி  உயர்வு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. விலைவாசி உயர்வை ஈடுகட்ட DA 3% சதவீதம் முதல் 34% சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த HRA-உம் உயர்த்தப்படலாம்.

மேலும் படிக்க

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் - அடிக்கிறது அடுத்த ஜாக்பாட்!

English Summary: 7th Pay Commission: Govt. Decides to Increase HRA of Central Government Employees? Details Inside! Published on: 20 April 2022, 10:12 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.