மத்திய ஊழியர்களின் காத்திருப்பு முடிவடையவுள்ளது. இப்போது ஊழியர்களின் சம்பளம் 40 ஆயிரம் ரூபாய் வரை உயரப் போகிறது. ஊழியர்களின் அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பது இன்று தெரியவரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தப் போகிறது. ஏஐசிபிஐ-இன் இதுவரையிலான தரவுகளின்படி, 5% அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்பது தெரிகிறது. இன்று மே மாதத்திற்கான ஏஐசிபிஐ பணவீக்க தரவு வர உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரித்தால், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 6 சதவீதம் உயர வாய்ப்புள்ளது. இப்படி நடந்தால், அகவிலைப்படி உயர்வால், ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என இந்த பதிவில் காணலாம்.
அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
அகவிலைப்படியின் அதிகரிப்பு ஏஐசிபிஐ-இன் தரவைப் பொறுத்தது. மார்ச் மற்றும் ஏப்ரல் 2022 இல் ஏஐசிபிஐ குறியீட்டில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக அகவிலைப்படியில் 5% அதிகரிப்பது தெளிவாகியுள்ளது. அதாவது, இப்போது ஊழியர்களின் டிஏ 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயரும். எனினும், இன்று மே மாத புள்ளிவிவரங்கள் வந்த பிறகு, ஊழியர்களின் அகவிலைப்படி 6% அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
ஏஐசிபிஐ இன்டெக்ஸ் சொல்வது என்ன?
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஏஐசிபிஐ குறியீட்டில் சரிவு இருந்தது. ஆனால் அதன் பிறகு ஏஐசிபிஐ- இன் புள்ளிவிவரங்கள் அதிகரித்து வருகின்றன. ஜனவரியில் 125.1, பிப்ரவரியில் 125 மற்றும் மார்ச் மாதத்தில் 126 ஆக இந்த தரவு இருந்தது.
மேலும் படிக்க
Share your comments