விவசாகிகளின் நிரந்தர வருமானம் என்பதினை முன்னெடுத்து மேலும் 8 லட்சம் விவசாகிகள் பயன் பெறும் வாயில் மீண்டும் ஒரு திட்டத்தினை மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. அதன் படி PM - Kisan திட்டத்தின் கீழ் பெரும் நிலம் வைத்திருப்பவர்களும் பயனடைவர்கள் என அறிவித்துள்ளது.
25 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களும் இந்த திட்டத்தினால் பலனடைவார்கள். நம் நாட்டில் உள்ள மொத்த விவசாயிகளில் 0.6% பேர் மட்டுமே அதிக அளவிலான நிலம் வைத்திருப்பவர்கள். குறிப்பாக வட மாநிலங்களான குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, பஞ்சாப் ஆகியன ஆகும். தென் மாநிலமான கர்நாடக இதில் அடங்கும்.
25 ஏக்கர் நிலம் |
சதவீதம்
|
ராஜஸ்தான் |
4.7% |
மத்திய பிரதேசம் |
0.6% |
பஞ்சாப் |
5.3% |
ஹரியானா |
2.5% |
ஜார்கண்ட் |
0.7%
|
குஜராத் |
0.7% |
கர்நாடக |
0.6%
|
சட்டிஸ்கர் |
0.6% |
மகாராஷ்டிரா |
0.4% |
தமிழ் நாடு |
0.2% |
ஆந்திரா |
0.2% |
உத்திர பிரதேசம் |
0.1% |
இம்மாநிலங்களை தொடர்ந்து தெலுங்கானா, அசாம், ஒடிசா, கேரளா, பீகார் , மேற்கு வங்கம், ஹிமாச்சல், உத்தராகண்ட், ஜம்மு ஆகியன வருகிறது. நிலம் வைத்திருக்கும் அனைவரும் இத்திட்டத்தினால் பயன் பெறுவார்கள். ரூ 6000 மூன்று தவணைகளாக கொடுக்கப்படும்.
PM - Kisan திட்டத்தினால் சிறு விவாசகிகள் முதல் தவணையாக ரூ 2000/ - பெற்று தற்போது இரண்டாம் தவணையினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 2 ஏக்கர் மேல் நிலம் வைத்திருப்பவர்களும் முதல் தவணையினை விரைவில் பெற உள்ளனர். அதன் வரிசையில் தற்போது 25 ஏக்கர் மேல் நிலம் வைத்திருப்பவர்களும் பயன் பெறுவார்கள்.
விதி விலக்கு
PM - Kisan திட்டத்தில் விவசாகிகள் அல்லது பிறர் பயன் பெற இயலாது. திட்ட வடிவில் பயன் பெற இயலாதவர்கள்
- மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்
- முன்னாள் அமைச்சர்கள்
- முன்னாள் ராணுவ வீரர்கள்
- மருத்துவர்கள்
- வழக்கறிஞர்கள்
- பொறியாளர்
என அரசு பரிந்துரைத்துள்ளது. தற்போது மாநிலங்கள் உள்ள அரசு அதிகாரிகள் விவசாகிகளின் பெயர் பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments