1. செய்திகள்

அதிர்ஷ்டசாலி: பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ. 960 கோடி

T. Vigneshwaran
T. Vigneshwaran
2 பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை போன்ற அத்தியவசிய பொருட்களை வாங்க அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக பள்ளி மாணவர்கள் பெயரில் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் பணம் செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ. 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கதிகார் மாவட்டம் பகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தை சேர்ந்த குருசந்திர விஷ்வாஸ், ஆசிஷ் குமார் ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள். இவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வங்கிக்கு சென்று தங்களது வங்கி கணக்கில் பள்ளி சீருடைக்காக அரசு உதவித்தொகை செலுத்தி இருக்கிறதா? என்பதை பார்க்க சென்று இருந்தனர்.

அவர்கள் உத்திரபீகார் கிராம வங்கிக்கு சென்று தங்களது கணக்கில் உள்ள தொகையை பற்றி விசாரித்தனர். அப்போது குருசந்திர விஷ்வாஸ் வங்கி கணக்கில் ரூ.60 கோடியும், ஆசிஷ்குமார் வங்கி கணக்கில் ரூ. 900 கோடியும் செலுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனால் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது. மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ. 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க தடை விதித்தார் வங்கி மேலாளர். மாணவர்களின் வங்கி கணக்குகளில் தவறுதலாக ரூ. 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும், வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க:

மிகவும் மலிவான விலையில் 32, 40 மற்றும் 43 அங்குல ஸ்மார்ட் டிவி!

முர்ரா இன எருமை வளர்ப்பில் இலங்கை ஆர்வம்!

English Summary: 960 crore in the bank accounts of 2 school students Published on: 16 September 2021, 06:35 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.