சென்னிமலை யூனியனில், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மேல்நிலைத்தொட்டி அமைக்க, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை, தானமாக தந்த தம்பதிக்கு, மக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை யூனியனுக்குஉட்பட்ட முகாசிப்பிடாரியூர் பஞ்சாயத்து, தமிழகத்தில் மிகப்பெரிய பஞ்சாயத்துகளில் ஒன்றாக உள்ளது. மொத்தம், 4,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
குடிநீர் பிரச்னை (Drinking water problem)
மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய மேல்நிலைத் தொட்டி இல்லை. அதை அமைக்க சொந்த நிலமும் இல்லை. இதனால் பஞ்சாயத்தில் குடிநீர் பிரச்னை முடிவுக்கு வந்தபாடில்லை. இந்நிலையில், மேல்நிலை தொட்டி அமைக்க, சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மக்கள் சார்பாக, ஒரு இடத்தை விலைக்கு வாங்க முடிவு செய்தனர். அதன்படி ஒரு இடத்தை தேர்வு செய்து, வீட்டுக்கு ஒரு தொகை நிர்ணயிக்கப்பட்டது.
தம்பதியின் நல்ல மனசு
இந்நிலையில், பஞ்சாயத்திற்கு உட்பட்ட, குமராபுரி மூன்றாவது வீதியில், மளிகை கடை நடத்தி வரும் முருகேஷ்-தமிழரசி தம்பதியர், தங்களுக்கு சொந்தமான இடத்தை, மேல்நிலைத் தொட்டி அமைக்க தருவதாக கூறினர். இரண்டே நாளில் பஞ்சாயத்துக்கு தானமாக எழுதி, மன்றத்தலைவர் நாகராஜ், துணை தலைவர் சதீஷ், உறுப்பினர் செல்வி குழந்தைவேல் ஆகியோரிடம் பத்திரத்தை வழங்கி விட்டனர்.
தானமாக தந்த இடத்தின் தற்போதைய மதிப்பு, 25 லட்சம் ரூபாய். நிலத்தை தானமாக கொடுத்த தம்பதிக்கு, பஞ்சாயத்து மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க
குங்குமப்பூ தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Share your comments