தமிழகத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
இதற்கெனச் சென்னையில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை அவர் நெல்லைக்கு வந்தடைந்தார். அவருக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வரவேற்றார் எனபது குறிப்பிடத்த்ககது.
பின்னர் பாளை யூனியன் ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கம்மாளன் குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரூ.15.05 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிமெண்ட் சாலையை ஆய்வு செய்தார். அங்குள்ள குளங்களைப் பார்வையிட்டார். அதன் பின்பு மரக்கன்றுகள் நட்டார்.
மேலும், தொடர்ச்சியாக தேவர் குளம் ஊராட்சியில் பனை ஓலை பொருட்கள் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் சார்பில் ரூ.31.25 லட்சத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய கட்டிடத்தினை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மகளிரின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது என்றும், சாதி ரீதியிலான பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக தி.மு.க ஆட்சியில் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது; ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அவை புனரமைக்கப்படாமல் விடப்பட்டது என்றும் கூறினார்.
அதோடு, பனை ஓலை உற்பத்தி கூடம், மகளிருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனால் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அவர்களின் பொருளாதார நிலையும் உயரும். சமுதாயத்தில் அவர்கள் உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள் எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
Share your comments