சாகுபடிக்கான செலவு அதிகரித்துவரும் வேளையில் சிறு, குறு விவசாயிகள் இத்தகைய பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றுவதற்கு தயங்குகிறார்கள். விவசாயிகளின் நலனுக்காக, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகளை வாங்குவதற்கு மானியம் வேளாண்மைப் பொறியியல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வழங்கும் திட்டம் தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நடப்பு 2022-23 வேளாண் நிதிநிலை அறிக்கையில், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகள் பொருத்தவும் ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000/- வீதம் 5,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, https://mis.aed.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பித்து, தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு உங்கள் வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்களை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
2, தொடங்கப்பட்டது ஜல்லிக்கட்டு முன்பதிவு
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 15ல் அவனியாபுரத்திலும், 16ல் பாலமேட்டிலும், 17ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முன் பதிவை இன்று பகல் 12 மணி முதல் 12ம் தேதி மாலை 5 மணி வரை madurai.nic.in என்ற இணைய தளத்தில் பதிவுசெய்து வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மதுரையில் இன்று 12 மணி முதல் முன் பதிவு மேற்கொள்ளும் பணிகள் ஆர்வமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன் பதிவு செய்வதற்கு எதெல்லாம் கட்டாயம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது
அதில், காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும். ஜல்லிகட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதோடு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அவசியமாகும்.
ஜல்லிகட்டில் பங்கேற்கும் காளைகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஜல்லிகட்டில் எதாவது ஒரு ஜல்லிகட்டில் மட்டுமே பங்கேற்க முடியும். ஜல்லிகட்டு காளையை அழைத்து வரும் காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதோடு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அவசியம் செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3, கேரளாவை கலங்கடிக்கும் பறவை காய்ச்சல்
திருவனந்தபுரம், ஆழூரில் உள்ள பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவியதை அடுத்து, கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் தொடங்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன.
கோழிகள், வாத்துகள் மற்றும் பிற செல்லப் பறவைகள் உட்பட 3,338 பறவைகள் கொல்லப்பட்டன மற்றும் 693 முட்டைகள் மற்றும் 344 கிலோ கோழித் தீவனங்கள் ஒரு பெரிய இயக்கத்தில் அழிக்கப்பட்டன. நடவடிக்கையின் ஒரு பகுதியாக பண்ணைகள் சுத்தப்படுத்தப்பட்டன.
4,மைசூரில் கேரள கோழி போக்குவரது வண்டிகள் சோதனை
கேரளாவில் பறவைக் காய்ச்சல் (பறவைக் காய்ச்சல்) பரவியதைத் தொடர்ந்து, மைசூரு மற்றும் சாமராஜநகர் மாவட்டங்களின் மாநில எல்லைக்குள் கேரளாவில் இருந்து கோழி போக்குவரத்து வாகனங்களை சுத்தப்படுத்திய பின்னரே கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அனுமதிக்கிறது. மைசூரு மாவட்டத்தின் எச்.டி.கோட் தாலுகாவில் உள்ள டி.பி.குப்பே சோதனைச் சாவடியிலும், சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள முல்ஹோளிலும் இந்த சுத்திகரிப்புப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, கேரளாவில் இருந்து நுழையும் முட்டை கேரியர்கள் உட்பட அனைத்து கோழிகளும் மாநிலத்திற்குள் நுழைவதற்கு முன்பு சுத்தப்படுத்தப்படுகின்றன. மைசூருவின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகளின் துணை இயக்குநர் டாக்டர் பி என் ஷடாக்ஷர மூர்த்தி கூறுகையில், பறவைக் காய்ச்சல் பரவாமல் மாநிலத்தை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த சுத்திகரிப்புப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. மைசூருவில் உள்ள டிபி குப்பே செக்போஸ்ட்டில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சுத்தப்படுத்த மூன்று பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஷடாக்ஷர மூர்த்தி தெரிவித்தார்.
ஆனால், பறவைக் காய்ச்சல் பாதிப்புக்குப் பிறகு கேரளாவில் இருந்து கோழிப்பண்ணை வாகனங்கள் வருவது வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போது கேரளாவில் இருந்து தினமும் சராசரியாக 5-6 கோழி வாகனங்கள் மாநிலத்திற்குள் வருகின்றன என்றார்.
5,பறவைக்காய்ச்சல் மற்றும் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலால் கேரளா மக்கள் கலக்கம்
பறவைக்காய்ச்சல் மற்றும் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலால் கேரளா மக்கள் கலக்கம் ஒட்டுமொத்த கேரள மக்களும் கலக்கத்தில் உள்ளனர். தமிழக அரசும் இவ்விசயத்தில் உஷாராக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறது.
மாநில வனப்பகுதிகளிலும் காட்டு பன்றிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த காட்டுப் பன்றிகளின் முக்கிய உடல் உறுப்புகளை ஆய்வு செய்த அந்தந்த மாநில அதிகாரிகள், இந்த பன்றிகள் அனைத்தும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலால் பாதித்து உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கேரளா வயநாடு பகுதியில் உள்ள பன்றிகளின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்ததில், அப்பன்றிகள் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக போபாலில் உள்ள விலங்கு நோய்களுக்கான உயர் பாதுகாப்பு தேசிய நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதனை உறுதி செய்த கேரள மாநில அரசு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதித்த 300 பன்றிகளைக் கொல்ல வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள, தொற்று உறுதி செய்யப்பட்ட பன்றிகளும் கொல்லப்பட வேண்டும் என உத்தரவிட்டது. உத்தரபிரதேசம், பிஹார், வடகிழக்கு மாநிலங்களிலும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளன.
6, பயிர் காப்பிட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கினார் முதல்வர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ,பயிர் காப்பிட்டு திட்டத்தின் கீழ் 2021-2022 மற்றும் 2022-023 ஆம் ஆண்டுக்களுக்கு மொத்தம் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு 318.30 கோடி ருபாய் இழப்பீடு தொகை வழங்கும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக ஐந்து விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார் ,இதில் வேளாண் அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
7,சேந்தமங்கலம் நிலக்கடலை செடி பிடுங்கும் இயந்திரத்திற்கு, 32 ஆயிரம் ரூபாய் மானியம்
வேளாண்மை உதவி இயக்குனர் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் சேந்தமங்கலம் அடுத்த மேலப்பட்டி, பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, பொம்மைசமுத்திரம் பகுதிகளில் உள்ள கிராம விவசாயிகளுக்கு தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தில், நிலக்கடலை செடி பிடுங்கும் இயந்திரத்திற்கு, 32 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
ரோட்டோ வேட்டர், சிறுகுறு, மகளிர், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு, 42 ஆயிரம் ரூபாய் மானியமும், பெரு விவசாயிகளுக்கு, 34 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிப்சம் ஒரு ஏக்கருக்கு, 200 கிலோ, 250 ரூபாய் மானியத்திலும், ஜிங்க் சல்பேட்,10 கிலோ, ரூபாய் 250 மானியத்திலும் வழங்கப்படுகிறது. என்று கூறியுள்ளார்.
8,நாமக்கல்லில் வரலாறு காணாத அளவு முட்டை விலை உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் தினமும் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டை சத்துணவு திட்டத்திற்கு சப்ளை செய்யப்பட்டு வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு முட்டையின் விலையை நிர்ணயம் செய்கிறது.
இதன்படி கடந்த ஜனவரி 9ம் தேதி ரூ.5.55 பைசாவாக இருந்த முட்டை விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.65 பைசாவாக இருந்தது.கடந்த ஆண்டு முட்டை விலை ரூ.5.50 பைசாவாக இருந்தது. முட்டை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலையாகும். அதுமட்டுமின்றி, கடைசி நாளில் ரூ.5.55 பைசாவாக இருந்த முட்டை விலை, தற்போது அதையும் தாண்டி ரூ.5.65 பைசா அதிகரித்துள்ளது.
50 ஆண்டு கால கோழி வளர்ப்பு வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலையாகும். சென்னையில் சில்லரை விலையில் முட்டை ஒன்று ரூ.6 முதல் ரூ.6.50 வரை விற்பனையாகிறது.
9,இன்றைய காய்கறி விலை
- தக்காளி-ரூ.20
- உருளைக்கிழங்ங்கு -ரூ.35
- பெரிய வெங்காயம் -ரூ.24
- சிறிய வெங்காயம் -ரூ.80
- வெண்டைக்காய் -ரூ.80
- பச்சை மிளகாய் -ரூ.25
- தேங்காய் -ரூ.25
- கேரட் -ரூ.35
- காலிபிளவர் -ரூ.30
- கத்திரிக்காய் -ரூ.35
- பீட்ரூட் -ரூ.35
10,வானிலை அறிக்கை
தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ கூடும்
ஓரிரு இடங்களில் அதிகாலை வேலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது
உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்
நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது
மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
மேலும் படிக்க:
தமிழக விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் மானியம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
Share your comments