புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் பகுதியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை நேரிடையாக சந்தைப்படுத்தும் வேளாண் பல்பொருள் அங்காடி எனும் சூப்பர் மார்க்கெட் விவசாயிகளால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட் மக்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்போது பார்க்கலாம்.
புதுச்சேரி பகுதிகளில் விவசாயிகளின் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரி அரசு வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு பல தரப்பட்ட சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு நிதி உதவி வழங்கி வருகிறது. அதோடு, பல்வேறு தொழில் முனைவோர்களை உருவாக்கியும் வருகிறது என்பது கூடுதல் சிறப்பு.
புதுச்சேரி அரசின் செயல்பாட்டின்படி புதுச்சேரி வில்லியனூர் தாலுகாவினைச் சேர்ந்த 525 விவசாயிகள் தலா 2000 ரூபாய் பங்களிப்புடன் திருக்காமேஸ்வரர் மேம்பட்ட வேளாண் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தினைத் தொடங்கி இருக்கின்றனர். இந்த வேளாண் பல்பொருள் அங்காடியில் ஆரம்பக் காலகட்டத்தில் சர்க்கரை மற்றும் நாட்டு சர்க்கரை பொருட்கள் மட்டுமே விற்பனை ஆனது.
மேம்படுத்தப்பட்ட விவசாய பல்பொருள் அங்காடியினை நவீனப்படுத்துகின்ற வகையில் விவசாயிகளின் பங்கீடுகளுக்கு சமமாகக் கடன் தொகையினை நபார்டு வங்கியும் வழங்கி இருக்கிறது. நபார்டு வங்கியின் உதவியோடு தொடங்கப்பட்டு இருக்கும் விவசாயிகளின் மேம்படுத்தப்பட்ட பல்பொருள் சிறப்பங்காடியில் சிறுதானியங்களும், இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட உணவுப் பொருட்களும் அடங்கிய அனைத்து பொருட்களும் விற்பனை செய்யக் கூடிய அங்காடி உருவாக்கப்பட்டுள்ளது.
சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடைபெற்றிருக்கிறது. இதில் வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மற்றும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டு உழவர்களின் மேம்படுத்தப்பட்ட பல்பொருள் சிறப்பு அங்காடியினைத் திறந்து வைத்துள்ளனர். இந்த பல்பொருள் சிறப்பு அங்காடியில் வில்லியனூர் பகுதியில் உள்ள விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் என்பது கூடுதல் சிறப்பு தரும் செய்தியாகும்.
புதுச்சேரியில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதாற்கு போதுமான தகுந்த வசதி இல்லாததால் விவசாயிகள் அனைவரும் நஷ்டத்தினைச் சந்தித்து வந்த நிலையில் தற்பொழுது 525 விவசாயிகள் தல 2000 ரூபாய் பங்களிப்புடன் பல்பொருள் சிறப்பு அங்காடியை தொடங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
கோவையில் விவசாயிகள் நூதனப் போராட்டம்! கஞ்சி தொட்டி திறந்து ஆர்பாட்டம்!!
ஊரக மக்களுக்கு விருது| ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிப்பு|இன்றே விண்ணப்பியுங்க!
Share your comments