1. செய்திகள்

ஆவின் தண்ணீர் பாட்டில்- கைக்கொடுக்குமா தமிழக அரசுக்கு?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

Aavin company is involved in the sale of drinking water

பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையிலும் ஆவின் நிறுவனம் விரைவில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலமாக குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அரை லிட்டர் (500 ml) முதல் ஒரு லிட்டர் (1 L) வரையிலான குடிநீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது ஆவின் நிறுவனம். மேலும், நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யவும் ஆவின் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதற்கான டெண்டரினை ஆவின் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஆவின் வாட்டர் பாட்டில்கள் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கொள்முதல் விலை பிரச்சினையில் கிடப்பில் போன தண்ணீர்:

ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்களிலும் வாட்டர் பிளாண்ட் உள்ளதால், விரைவில் குடிநீர் பாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்தாண்டு தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி எழுந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமப்புற விவசாயிகளுக்கு இரண்டாவது வருமான ஆதாரமாக இருந்து வருபவை பால் பண்ணை. 2022-23 ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத சவால்களை ஆவின் எதிர்கொண்டது. ஆவின் நிறுவனத்துடன் தொடர்புடைய பால் பண்ணையாளர்களில் ஒரு பகுதியினர் தங்களது உற்பத்திப் பொருட்களை தனியார் பால் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்க தொடங்கிவிட்டனர்.

ஆவின் நிறுவனம் பசும்பாலினை லிட்டருக்கு ரூ.35-க்கும், எருமைப்பாலினை லிட்டருக்கு ரூ.44-க்கும் கொள்முதல் செய்யும் நிலையில், தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.6 முதல் ரூ.8 வரை கூடுதலாக வழங்குகின்றன. பசும்பால் உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.55 செலவாகிறது என்று பால் உற்பத்தியாளர்கள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலும் குறைந்துள்ளது.

இதற்கு மத்தியில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ஆவடி நாசர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார். ஆவின் நிறுவனத்தினை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல புதிய திட்டங்கள், முன்னெடுப்புகள் விரைவில் தொடங்கும் என அண்மையில் அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தான் இந்த டெண்டர் அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளனர். ஆவின் நிறுவனம் சார்பில் இனிப்புகள், ஐஸ்கீரிம் போன்றவை தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த தண்ணீர் பாட்டில் திட்டமும் வாடிக்கையாளர்களை அதிகளவில் கவரும் என பால்வளத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

மேலும் காண்க:

குறுவை சாகுபடி- ஆடுதுறை நெல் ரகத்தை (ADT) விரும்பும் விவசாயிகள்

English Summary: Aavin company is involved in the sale of drinking water

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.