1. செய்திகள்

பால் உற்பத்தி விவசாயிகளுக்கு காப்பீட்டு பிரிமீயத்தில் 50 சதவீத மானியம்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

Aavin decided to provide a 50% subsidy in insurance premium

பால் உற்பத்தி செலவைக் குறைக்க ஆவின் திட்டமிட்டுள்ள நிலையில், ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு எட்டு முதல் ஒன்பது லட்சம் லிட்டர்கள் வரை குறைந்துள்ளது, இதனால் சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமப்புற விவசாயிகளுக்கு இரண்டாவது வருமான ஆதாரமாக இருந்து வருபவை பால் பண்ணை. 2022-23 ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத சவால்களை ஆவின் எதிர்கொண்டது. ஆவின் நிறுவனத்துடன் தொடர்புடைய பால் பண்ணையாளர்களில் ஒரு பகுதியினர் தங்களது உற்பத்திப் பொருட்களை தனியார் பால் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்க தொடங்கிவிட்டனர்.

ஆவின் நிறுவனம் பசும்பாலினை லிட்டருக்கு ரூ.35-க்கும், எருமைப்பாலினை லிட்டருக்கு ரூ.44-க்கும் கொள்முதல் செய்யும் நிலையில், தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.6 முதல் ரூ.8 வரை கூடுதலாக வழங்குகின்றன. பசும்பால் உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.55 செலவாகிறது என்று பால் உற்பத்தியாளர்கள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள தோல் அம்மை நோய் பால் உற்பத்தியை பாதித்ததால் பால் தேவை அதிகரித்துள்ளதாக ஆவின் கூறியுள்ளது. இருந்தபோதிலும், பால் விநியோக வலையமைப்பை வலுப்படுத்தவும், பால் உற்பத்தி செலவைக் குறைக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

காப்பீட்டு பிரிமீயத்தில் 50 சதவீத மானியம்:

தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் ஐந்து லட்சம் பால் உற்பத்தியாளர் விவசாயிகளுக்கு காப்பீட்டு பிரீமியத்தில் 50% மானியம் வழங்கவும் ஆவின் முடிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டில், 1.2 லட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. ஆவின் பால் சப்ளையர்கள் கவரேஜ் தொகையில் 1.5% பிரீமியமாக செலுத்த வேண்டும், அதே சமயம் தனிநபர் காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பவர்கள் கவரேஜ் தொகையில் 6% செலுத்த வேண்டும். இது பால் உற்பத்திக்கான உள்ளீட்டுச் செலவைக் கணிசமாகக் குறைக்கும்என்று நாசர் கூறினார்.

விவசாயிகளுக்கு கடனுதவி:

இரண்டு லட்சம் கலப்பின கறவை மாடுகளை வாங்குவதற்கான நிர்வாகப் பணிகளை ஆவின் தொடங்கியுள்ளது என்று பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் தெரிவித்தார். விவசாயி, ஆவின் மற்றும் வங்கி இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஆவின் நிறுவனத்திற்கு தொடர்ந்து பால் வழங்கும் விவசாயிகளுக்கும், மூன்று பசுக்கள் வரை வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் கடன் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும். ஒரு நாளைக்கு 10 லிட்டர் வரை பால் கறக்கக்கூடிய மாடுகளை வாங்குவதற்கு விவசாயிகளுக்கு ஆவின் கடனுதவி அளிக்கும்.

எருமை மாடு வளர்ப்புத்திட்டம்:

விவசாயிகளுக்கு ஆதரவாக எருமை மாடு வளர்ப்பு திட்டமும் தொடங்கப்படும். “எருமைக் கன்றுகளுக்கு ஆறு மாத வயது முதல் 32 மாதங்கள் வரை தீவனம் மற்றும் தாதுக் கலவையை இலவசமாக வழங்குவோம், ஏனெனில் அதிக தீவனத் தேவையால் எருமைக் கன்றுகளை வளர்ப்பது விலை அதிகம். இந்த முயற்சியானது பாலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்கவும், எருமை பால் உற்பத்தியை அதிகரிக்கவும்  உதவும்" என்று நாசர் கூறினார்.

கருவுறுதல் பிரச்சினைக்கு சிகிச்சை:

மாடுகளின் மலட்டுத்தன்மையுடன் தொடர்புடைய செலவினங்களைச் சமாளிக்க முடியாத விவசாயிகளுக்கு உதவ, ஈஸ்ட்ரஸ் ஒத்திசைவு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஆவின் வட்டாரங்கள் தெரிவித்தன. விவசாயிகள் பெரும்பாலும் மலட்டுத்தன்மை பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாடுகளை இறைச்சி வியாபாரிகளுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கிறார்கள். புதிய முயற்சியின் கீழ், கருவுறுதல் பிரச்சினைகளைத் தீர்க்க ஆண்டுதோறும் சுமார் 20,000 பசுக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். ஆவின் நிறுவனத்திற்கு பால் சப்ளை செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சேவை கிடைக்கும்என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மானிய விலையில் மாட்டுத்தீவனம்:

தற்போது, பால் சப்ளையர்களுக்கு, மாட்டுத் தீவனம், மானிய விலையில், கிலோ, 21 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. வேளாண் துறையால் உற்பத்தி செய்யப்படும் விலையுயர்ந்த சத்தான தீவனத் துகள்கள் மற்றும் தரமான தீவன விதைகள் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்," என்று அதிகாரி மேலும் கூறினார்.

photo courtesy:  K. Pichumani

மேலும் காண்க:

plus 2 Exam Results- துணைத்தேர்வு எப்போது? மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம்

TNSTC விரைவு பேருந்துகளில் பெண்களுக்கென புதிய வசதி அறிமுகம்!

English Summary: Aavin decided to provide a 50% subsidy in insurance premium

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.