தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை இன்றுமுதல் (16/09/2022) உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆவின் பாலின் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆவின் தயாரிப்புகளின் இனிப்புப் பொருட்கள் விலை இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
பொதுத்துறை கூட்டுறவு நிறுவனம் ஆவின் தனது தயாரிப்புகளின் விலையினை உயர்த்தியுள்ளது. இன்று முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்த விலை உயர்வுக்குத் தமிழகப் பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
மத்திய அரசு பால் பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி. விதித்ததை அடுத்துக் கடந்த ஜூலை மாதத்தில் தயிர் மற்று நெய் ஆகியவற்றின் விலையினை உயர்த்தி ஆவின் நிறுவனம் உத்தரவு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, இன்று இனிப்புப் பொருட்களின் விலையினை உயர்த்துவதாகக் கூறியுள்ளது.
விலை உயர்வு பட்டியல்
- 125 கிராம் குலாப் ஜாமுன்: ரூ. 45-லிருந்து ரூ. 50 ஆக உயர்வு
- 250 கிராம் குலாப் ஜாமுன்: ரூ. 80-லிருந்து ரூ. 100 ஆக உயர்வு
- 100 கிராம் ரசகுல்லா: ரூ. 40-லிருந்து ரூ. 45 ஆக உயர்வு
- 200 கிராம் ரசகுல்லா: ரூ. 80-லிருந்து ரூ. 90 ஆக உயர்வு
- 100 கிராம் பால்கோவா: ரூ. 47-லிருந்து ரூ. 55 ஆக உயர்வு
- 250 கிராம் பால்கோவா: ரூ. 120-லிருந்து ரூ. 140 ஆக உயர்வு
மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர்! இன்றே அப்ளை செய்யுங்க.!
இந்த விலை உயர்வு விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு விற்பனை விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், ஆவின் பொருட்களும், ஆவின் பாலும் தட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழகப் பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments