1. செய்திகள்

Aavin: ஒரு நாளைக்கு 70 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு!

Poonguzhali R
Poonguzhali R
Aavin: Target to purchase 70 lakh liters of milk per day!

பால் உற்பத்தியை அதிகரிக்க பால் பண்ணையாளர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்க நிர்வாக சீர்திருத்தங்கள் தேவை என்று தமிழகப் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ஆவின் பால் பண்ணைகளின் பால் கையாளும் திறனை இந்த ஆண்டு இறுதிக்குள் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டரில் இருந்து 70 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

பால் உற்பத்தியை அதிகரிக்க பால் பண்ணையாளர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்க நிர்வாக சீர்திருத்தங்கள் தேவை என்று தங்கராஜ் வலியுறுத்தி உல்ளார். இதையடுத்து, பால் கொள்முதல் மற்றும் விநியோகத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு வருவதாக நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு கால்நடைத் தீவனம் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும், கால்நடைகளுக்கான காப்பீட்டுத் தொகையை அதிகரித்து, பால் பண்ணையாளர்களுக்கான செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

அரசிடமிருந்து உரிய அனுமதி பெறாமல், விவசாயிகளிடம் இருந்து பால் சேகரிக்க முகவர்களை நியமிக்கும் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தனியார் பால் பிராண்டுகளில் கலப்படம் செய்வதைக் கண்காணிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

“ஆவின் பாலில் கலப்படத்தைத் தடுக்க, பால் ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் டிராக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அங்கீகரிக்கப்படாத செயல்களை தடுக்க பால் சேகரிக்கும் மையங்களில் முகத்தை அடையாளம் காணும் கேமராக்கள் பொருத்தப்படும்,'' என்றார்.

ஆவடி மற்றும் அம்பத்தூரில் பற்றாக்குறை காரணமாக ஆவின் பால் விநியோகத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட இடையூறுகளை ஒப்புக்கொண்ட அமைச்சர், கடந்த வாரத்தில் பால் கொள்முதல் அதிகரித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். குறுகிய அல்லது தாமதமான விநியோகம் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், ஆவின் தனது சந்தை வரம்பை விரிவுபடுத்தவும், வருவாயை அதிகரிக்கவும் பல்வேறு தயாரிப்புகளை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு 2 லட்சம் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதியில் திறக்கப்படும்!

தாமிரபரணியில் குவியும் பிளாஸ்டிக்! அகற்றும் NHAI!

English Summary: Aavin: Target to purchase 70 lakh liters of milk per day! Published on: 19 May 2023, 01:35 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.