கையில் பணத்தைக் கொண்டு சென்று பொருள் வாங்கிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஏனெனில் தற்போது கூடுதல் பாதுகாப்பு கருதி, அனைவரும் ATM Cardயை அவசியம் பயன்படுத்துகிறோம்.
குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் ஜன்தன் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கும், மற்ற வாடிக்கையாளர்களுக்கும் RuPay ATM Card வழங்கப்படுகிறது. இந்த Card National Payments Corporation of India (NPCI) என்ற நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
இந்த RuPay ATM Card டைப் பயன்படுத்தி, பொருட்களை ஆன்லைனில் வாங்கினாலோ, கடைகளில் இந்த Cardடைப் பயன்படுத்தினாலோ Money back Offer வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த ATM Cardடைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த Cardடை வாடிக்கையாளர் பயன்படுத்தும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர்களது பொருளாதார நெருக்கடி காலங்களில் பயன்படும் வகையில் Credit Cardயையும் இந்நிறுவனம் விநியோகம் செய்கிறது.
உணவுப்பொருட்கள் டெலிவரி (Food Delivery), மருந்துகளை வாங்குதல் (Medicine) உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு இந்த Cardடைப் பயன்படுத்தி, பல சலுகைகளைப் பெற முடிகிறது. அதிலும் பண்டிகைக் காலங்களில் அதிகளவில் பயன்பெறலாம்.
ரூ.10 லட்சம் காப்பீடு (Rs.10Lakhs Insurance)
இதன் தொடர்ச்சியாக தற்போது குறிப்பாக ரூ.10 லட்சம் வரை லிமிட் (Limit)உள்ள Credit Cardடை பெறத் தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ரூ.10 லட்சம் ரூபாய்க்கான விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி தங்கள் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வாடிக்கையாளர்கள், இலவசமாக விபத்துக் காப்பீடும் பெற்றுக்கொள்கிறார்கள்.
மேலும் படிக்க...
TNAUவில் பாதுகாப்பான மின்னணு பலகை கணிப்பொறி கல்விமுறை அறிமுகம்!
12 ஆயிரம் சிறைக் கைதிகளுக்கு யோகா பயிற்சி- ஈஷாவின் சிறப்பு சேவை!
Share your comments