1. செய்திகள்

வேளாண்துறையில் குவிந்துள்ள கல்விவாய்ப்புகள்-தெரிந்துள்ள கொள்ளவேண்டிய படிப்புகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Agriculture Courses

Credit: Entrance Exams

எந்த ஒரு துறையிலும் தொய்வும், சரிவும் ஏற்படலாம். ஆனால் ஒருபோதும் சரிவையோ, வீழ்ச்சியையோ சந்தித்திராத துறை என்றால் அவை வேளாண்மைத்துறையும், தோட்டக்கலைத்துறையுமே. காரணம், உலகம் உயிர்ப்புடன் இயங்குவதற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வது வேளாண்மைத்துறை என்பதுதான்.

அதனால்தான் ப்ரொஃபஷ்னல் கோர்ஸ் Professional Course எனப்படும் பட்டியலில் வரும் வேளாண்மைத்துறை சார்ந்த படிப்புகள், பிளஸ்-2 மாணவர்களின் விருப்பப்பாடங்களுள் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

ஆகையால், இத்துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன, இத்துறையைப் படிப்பதால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், எதிர்காலம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அடிப்படைக் கல்வித்தகுதி (Qualification)

12ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், வேளாண்துறை பற்றி பயில ஆர்வம் கொண்டிருப்பதும் முக்கியம்.

பாடப்பிரிவுகள்

B.Sc., Agriculture (விவசாயம்)
B.Sc., Agriculture Management (விவசாய மேலாண்மை)
B.Tech., Bio Informatics (உயிர் தகவல்)
B.Tech., Agriculture Engineering (வேளாண்மை பொறியியல்)
B.Tech., Agriculture Information Technology (விவசாய தகவல் தொழில்நுட்பம்)
B.Sc., Horticulture (தோட்டக்கலை)
B.Tech., Horticulture (தோட்டக்கலை தொழில்நுட்பம்)
B.Sc., Forestry (காடு வளர்ப்பு)
B.Sc., Cericulture (பட்டு வளர்ப்பு)
B.Tech., Food Process Engineering (உணவு பதப்படுத்துதல்)

கால அளவு (Years)

இந்தப் படிப்புகள் அனைத்துமே 4 ஆண்டு பாடப்பிரிவுகள்

பட்டய படிப்புகள் (Diploma)

தவிர, விவசாயம் (Diploma in Agriculture), தோட்டக்கலை (Diploma in Horticulture) பிரிவுகளில் இரண்டு ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ எனப்படும் பட்டய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

கோயம்புத்தூர், திண்டிவனம், தர்மபுரி, ஒரத்த நாடு ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிற்சி மையங்களில் டிப்ளமோ பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. மேலும், திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்திலும் டிப்ளமோ பயிற்சி அளிக்கப்படுகிறது.

மத்திய அரசு தேர்வு முறை 

ஐசிஏஆர் (ICAR - Indian Council for Agriculture Research) நடத்தும் பொது நுழைவுத்தேர்வில் (AIEEA) வெற்றி பெறுவதன் மூலம் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேரலாம். இணையத்தள முகவரி: www.icar.org.in

மாநில அரசு தேர்வு முறை

பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்தும் மாநில பொது கலந்தாய்வு முறை மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறும். இணையத்தள முகவரி: www.tnau.ac.in

Credit: Pinterest

வேலைவாய்ப்பு

இன்றைய நிலையில் உலகம் முழுவதும் 800 கோடி வாடிக்கையாளர்களை உள்ளடக்கிய உணவு உற்பத்தித் துறைக்கு மூலகாரணியாக விளங்குவது வேளாண்மைத்துறை மட்டுமே. அதனால், மனிதர்களுக்கு பசி இருக்கும் வரை இத்துறையில் வேலைவாய்ப்புகளுக்கும் ஒருபோதும் பஞ்சமில்லை.

மத்திய, மாநில அரசுத்துறைகள் மட்டுமின்றி தனியார் துறைகளிலும் வேளாண் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றலாம்.  ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

வேளாண்மைக் கல்லூரிகள்  (Agri colleges)

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர்,புதுக்கோட்டை, மற்றும் மதுரை தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், முதுநிலை பயிற்சி கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பல்லாபுரம், குமுளூர், திருச்சி,
அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி.
தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிக்குளம், திருநெல்வேலி.

தோட்டக்கலைக் கல்லூரிகள்  (Horticulture Colleges)

அரசு சார்பில் கோயம்புத்தூர், தேனி, மதுரை மற்றும் திருச்சியில்  தமிழ்நாடு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன.

வனத்துறை அரசு கல்லூரிகள்   (Forest Colleges)

தமிழ்நாடு வனத்துறை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர். மேலும் விவரங்களை www.tnau.ac.in என்ற இணையத்தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இதேபோல் மத்திய அரசின் வேளாண்மை, தோட்டக்கலை கல்லூரிகளும் நாடு முழுவதும் இயங்குகின்றன.

மேலும் படிக்க...

PMKSY:சொட்டுநீர் பாசனப் பள்ளம் அமைக்க ரூ.6ஆயிரம் வரை மானியம்- கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு!

PMFBY:கோவை, சேலம் மாவட்ட விவசாயிகள் செப்.15க்குள் காப்பீடு செய்ய வேண்டும் - அதிகாரிகள் அறிவுறுத்தல்!

English Summary: Accumulated education opportunities in agriculture-courses to know!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.