சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பள்ளி மாணவர்களின் வசதிக்காகவும் 12 வழித்தடங்களில் 20 பேருந்து சேவைகளை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்து இருக்கிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
அதிக நெருக்கடியாக காணப்படும் 12 வழித்தடங்களில் கூடுதலாக 20 பேருந்து சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகக் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பயணிப்பது வழக்கம்.
இத்தகைய நேரத்தில் மேற்குறிப்பிட்ட கூடுதல் பேருந்து சேவையை அமல்படுத்தியுள்ளனர். இதற்காக களப்பணியில் இறங்கிய அதிகாரிகள் எந்தெந்த வழித்தடங்களில் தேவை அதிகமாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயார் செய்த நிலையில் அதன் அடிப்படையில் கூடுதல் பேருந்து சேவை தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
29A - பெரம்பூர் to எழும்பூர்
54R - ராமாபுரம் to குமணஞ்சாவடி
M88 - போரூர் to வடபழனி
M88 - போரூர் to குன்றத்தூர்
54R - ராமாபுரம் to டைடல் பார்க்
147 - தி.நகர் to அம்பத்தூர் தொழிற்பேட்டை
153 - சி.எம்.பி.டி to குமணஞ்சாவடி
56A - எண்ணூர் to வள்ளலார் நகர்
5G - கண்ணகி நகர் to வேளச்சேரி
38A - மாதவரம் to பிராட்வே
21X - கிண்டி to பிராட்வே (வழி மந்தைவெளி)
21G - கிண்டி to பிராட்வே
மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில் கூடுதல் பேருந்து வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு செல்வது பெரிதும் குறைந்து இருக்கிறது. பேருந்துகளில் மாணவர்கள் ஏறும் போது பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து ஒழுங்குபடுத்த போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தொடர்ச்சியாக ஒழுங்குபடுத்தி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தனர்.
மேலும் படிக்க
Aadhar: ஆதார் கார்டில் ஈசியா அப்டேட் செய்யலாம் - புதிய வசதி!
இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை செக் பண்ணுவது எப்படி?
Share your comments