விவசாய வணிகத்தை மேம்படுத்த புதிய APP வெளியீடு, விவசாய பத்திரிக்கையான கிரிஷி ஜாக்ரனின் தலைமை ஆசிரியர் மற்றும் இந்திய அமைச்சர் சந்திப்பு, வாழைத்தார் விலை உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்ச!, தமிழகத்தில் நெல் கொள்முதல் செப்டம்பரில் தொடக்கம்: மத்திய அரசு தகவல், பூக்களின் விலையில் சரிவு! முதலான விவசாயச் செய்திகளை இப்பதிவு விளக்குகிறது.
விவசாய வணிகத்தை மேம்படுத்த புதிய APP வெளியீடு
ITC விவசாய வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில் "ITCMAARS" App-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி விவசாயிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் சார்ந்த தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் ஹைப்பர்லோகல் பயிர் ஆலோசனைகளை வழங்கும் எனக் கூறப்படுகிறது. "ITCMAARS" App பயன்பாட்டின் மூலம், விவசாயிகள் நல்ல தரமான உள்ளீடுகள், சந்தை இணைப்புகள் மற்றும் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன்கள் போன்ற தொடர்புடைய சேவைகளுக்கான அணுகலைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாய பத்திரிக்கையான கிரிஷி ஜாக்ரனின் தலைமை ஆசிரியர் மற்றும் இந்திய அமைச்சர் சந்திப்பு!
இன்று கிரிஷி ஜாக்ரனின் தலைமை ஆசிரியர் திரு.எம்.சி.டாமனிக் மற்றும் பி.எஸ்.சைனி உள்ளிட்ட கிரிஷி ஜாக்ரன் குழுவினர், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இந்நிகழ்வில் விவசாயத்திற்கு மிகுந்த துணைபுரியும் பத்திரிக்கையாகச் செயலபடுவதாக கிரிஷி ஜாக்ரனை அமைச்சர் பாராட்டினார். குறிப்பாக AJAI என்று அழைக்கப்படும் இந்திய வேளாண் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தொடக்கத்தைக் குறித்தும் பாராட்டினார். அதோடு, வரும் 2023 மார்ச் 1 முதல் 3 வரை நடைபெற உள்ள Agri Startup கூட்டுறவு மற்றும் FPO உச்சி மாநாட்டிற்கு அனைத்து ஆதரவினைத் தருவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழைத்தார் விலை உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்சி!!
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து வீசிய பலத்த காற்றின் வேகம் காரணமாக ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்ததால் வாழைத்தாரின் வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி வாழைச் சந்தையில் வாழைத்தார்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. மாதம் 500 ரூபாய் எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நாட்டுத்தார் தற்பொழுது 1000 ரூபாய் எனவும், 300 ரூபாய் எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த சக்கைத்தார் 1200 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுன்கிறது. இந்த விலையேற்றம் வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் நெல் கொள்முதல் செப்டம்பரில் தொடக்கம்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சம்பா பருவச் சாகுபடியின்பொழுது பருவமழையால் நெல் மூட்டைகள் சேதமடைய வாய்ப்பு இருப்பதால், நெல்லின் கொள்முதலை ஒரு மாதம் முன்கூட்டியே தொடங்க அரசு உத்தரவு அளித்துள்ளது. சம்பா பருவத்திற்கான சந்தையின் காலம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை ஆகும். ஆனால் தமிழகத்தில் சம்பா பருவச் சாகுபடியின்போது பருவமழையால் நெல் மூட்டைகள் சேதமடைய வாய்ப்பு இருப்பதால், விவசாயிகளின் நலன் கருதி முன்கூட்டியே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பூக்களின் விலையில் சரிவு!
தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை குறைந்துள்ளது. தூத்துக்குடி பூக்களின் சந்தைக்கு பேரூரணி, தெய்வசெயல்புரம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மதுரை, ஊட்டி முதலான இடங்களில் இருந்தும் பூக்கள் அனைத்தும் விற்பனைக்காகக் கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில் ஆடிமாதம் பிறப்பை முன்னிட்டு சுப முகூர்த்தத் தினங்கள் இருப்பதால் தூத்துக்குடி பூ சந்தையில் பூக்களின் விலை குறைந்திருக்கிறது. மல்லிகைப்பூ கிலோ 400 ரூபாய் எனவும், பிச்சிப்பூ கிலோ 600 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் பூ வியாபாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் படிக்க
வேளாண் செய்திகள்: விவசாய இடுபொருள் வாங்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு
Share your comments