ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், கொடுமுடி, வெப்பிலி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.41 லட்சத்து 28 ஆயிரத்து 786-க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடந்தது.
தேங்காய் ஏலம்
தேங்காய் (Coconut) 8 ஆயிரம் கொண்டு வரப்பட்டது. சிறிய தேங்காய் ஒன்று 5 ரூபாய் 21 காசுக்கும். பெரிய தேங்காய் ஒன்று 20 ரூபாய் 11 காசுக்கும் என மொத்தம் ரூ.81 ஆயிரத்து 983-க்கு ஏலம் போனது. இதேபோல் கொப்பரை தேங்காய் 47 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இது (குவிண்டால்) ரூ.10 ஆயிரத்து 689 முதல் ரூ.12 ஆயிரத்து 649 வரை என மொத்தம் ரூ.1லட்சத்து 80 ஆயிரத்து 892-க்கு விற்பனை ஆனது.
எள், ஆமணக்கு, மக்காச்சோளம்
ஆமணக்கு 12 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) ரூ.4 ஆயிரத்து 289 முதல் ரூ.4 ஆயிரத்து 661 வரை என மொத்தம் ரூ.28 ஆயிரத்து 342-க்கு விற்பனை ஆனது. வெள்ளை எள் 10 மூட்டைகள் ஏலத்துக்கு வந்தன. இது (குவிண்டால்) ரூ.9 ஆயிரத்து 549 முதல் ரூ.10 ஆயிரத்து 750 வரை என மொத்தம் ரூ.46 ஆயிரத்து 675-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மக்காச்சோளம் (Maize) 24 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இது (குவிண்டால்) ரூ.1,629 முதல் ரூ.1,650 வரை என மொத்தம் ரூ.29 ஆயிரத்து 592-க்கு ஏலம் போனது. அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்து 384-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கொடுமுடியில் விற்பனை
கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரில் இயங்கிவரும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்களான தேங்காய், கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. தேங்காய் 11ஆயிரத்து 146 கொண்டு வரப்பட்டன. இது (கிலோ) 32 ரூபாய் 65 காசு முதல் 38 ரூபாய் 65 காசு வரை என மொத்தம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 186-க்கு விற்பனையானது
விவசாயிகள் 262 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரம் கொப்பரை தேங்காய் (கிலோ) 128 ரூபாய் 10 காசு முதல் 133 ரூபாய் 71 காசு வரையும், 2-ம் தரம் கொப்பரை தேங்காய் (கிலோ) 94 ரூபாய் 29 காசு முதல் 132 ரூபாய் 27 காசுக வரை என மொத்தம் ரூ.14 லட்சத்து 7 ஆயிரத்து 302-க்கு கொப்பரை தேங்காய் விற்பனை ஆனது.
எள் 285 மூட்டைகள் கொண்டு் வரப்பட்டன. இது (கிலோ) 83 ரூபாய் 69 காசு முதல் 112 ரூபாய் 31 காசு வரை என மொத்தம் ரூ.21 லட்சத்து 59 ஆயிரத்து 626-க்கு ஏலம் போனது. கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.36 லட்சத்து 85 ஆயிரத்து 114-க்கு ஏலம் போனது.
வெப்பிலியில் விற்பனை
சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய்கள் (Coconut) ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 4 ஆயிரத்து 593 தேங்காய்களை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக 32 ரூபாய் 34 காசுக்கும், அதிகபட்ச விலையாக 37 ரூபாய் 41 காசுக்கும் என மொத்தம் 76 ஆயிரத்து 288 ரூபாய்க்கு ஏலம் போனது.
இந்த தகவலை ஒழுங்குமுைற விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் து.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
அந்தியூர், கொடுமுடி, வெப்பிலி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.41 லட்சத்து 28 ஆயிரத்து 786-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஈரோட்டில் ஏல முறையில் நாட்டு சர்க்கரை மற்றும் பூக்கள் விற்பனை
மா விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை! நிவாரணம் வழங்க கோரிக்கை!
Share your comments