ஊடகத்துறையில் விவசாயம் குறித்த செய்திகளுக்கு போதிய வெளிச்சம் இல்லை என்று கிரிஷி ஜாக்ரனின் நிறுவனர் எம்.சி. டொமினிக் வெட்டிவேரின் 7-வது சர்வதேச மாநாட்டில் உரையாற்றியுள்ளார்.
தாய்லாந்தின் சியாங் மாயில் பகுதியில் 7-வது சர்வதேச வெட்டிவேர் (ICV-7) மாநாடு நடைப்பெற்று வருகிறது. இந்த மாநாட்டின் முக்கிய வேளாண் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தம், மண் மற்றும் நீரைப் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட உள்ளது.
நேற்று தொடங்கிய இந்த மாநாடு வருகிற ஜூன் 1 ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இரண்டாம் நாள் நிகழ்வான இன்று சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற கிரிஷி ஜாக்ரனின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர், எம்.சி. டொமினிக் விவசாயத் தொழில் பற்றிய நுண்ணறிவு குறித்து உரையாற்றினார். மேலும் விவசாயத் தொழில் ஏன் பின்தங்கியுள்ளது, அதில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள், என்னவெல்லாம் என்பதனையும் எடுத்துரைத்தார்.
டொமினிக் உட்பட சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்தில் அக்கறை கொண்ட பல முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். விவசாயத் தொழில் ஏன் பின்தங்கியுள்ளது என்பதையும், அந்த வெற்றிடத்தை நிரப்ப என்ன செய்யலாம் என்பதையும் மக்களுக்கு தெரிவித்தார். டொமினிக்கின் கூற்றுப்படி, மக்கள் மத்தியில் தகவல் தொடர்பு ஊடகமாகச் செயல்படும் ஊடகத் துறையில் விவசாயத் துறைக்கு போதிய வெளிச்சம் கிடைக்கவில்லை எனக்குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், "எங்களிடம் பொழுதுபோக்கினை கவர் செய்வதில் அனைத்து ஊடகங்களும் ரெடியாக உள்ளன. ஆனால் விவசாயத்துறையினை கவர் செய்வதில் ஊடகங்களிடமே போதிய வரவேற்பு இல்லை என்றார். கிரிஷி ஜாக்ரனின் Agriculture World இதழின் சிறப்புப் பதிப்பானது வெட்டிவேரின் 7-வது சர்வதேச மாநாடு (ஐசிவி-7) பற்றிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது. அதனைப் போல களத்திலிருந்து வேளாண் தகவல்களை வழங்க ஊடகங்கள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.”
க்ரிஷி ஜாக்ரனின் வேளாண்மை இதழின் ஜூன் மாதத்திற்கான சிறப்புப் பதிப்பு நேற்று, (மே 29, 2023) நிகழ்வின் முதல் நாளிலேயே வெளியிடப்பட்டது. டிவிஎன்ஐயின் தொழில்நுட்ப இயக்குனரும், ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான இயக்குநருமான பால் ட்ரூங், க்ரிஷி ஜாக்ரான் மேற்கொள்ளும் முயற்சியினை வெகுவாக பாராட்டி அங்கிருந்த பார்வையாளர்களிடம் பேசினார்.
மேலும் Agriculture World இதழைக் குறிப்பிட்டு, “நமது மாநாட்டின் சிறப்புப் பதிப்பைத் தயாரித்திருக்கிறார்கள்” என்றார். Agriculture World இதழ் இந்தியாவில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது என்றும் அவர் உலகளாவிய பார்வையாளர்களுக்கு தெரிவித்தார்.
தாய்லாந்தின் சியாங் மாயில் 7வது சர்வதேச வெட்டிவர் மாநாட்டில் (ஐசிவி-7) கிரிஷி ஜாக்ரன் கலந்துகொண்டது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம். என்றார் ரிச்சர்ட் கிரிம்ஷா, (ஓபிஇ-நிறுவனர்).
க்ரிஷி ஜாக்ரனின் Agriculture World குழுவின் கடுமையான உழைப்பு மற்றும் முயற்சிகளைப் பார்த்த ரிச்சர்ட், “ஒரு சிறந்த விளக்கக்காட்சிக்குப் பிறகு, AW மற்றும் INVN இன் உண்மையான அர்ப்பணிப்பை நான் நம்புகிறேன். இது ஒரு சிறந்த புதிய வெட்டிவேர் முயற்சியின் ஆரம்பம் எனவும் தெரிவித்தார்.
மேலும் காண்க:
Share your comments