விவசாயத் துறையில் பெரிய மாற்றங்களுக்கு 'இந்திய வேளாண் பத்திரிகையாளர்கள் சங்கம் (AJAI) வழி வகுக்கும் என மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்தார். கிருஷி ஜாகரன் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் எம்.சி.டோமினிக் மற்றும் குழு உறுப்பினர்கள் மத்திய அமைச்சரை இன்று சந்தித்தனர்.
பால்பண்ணைத் துறையின் தற்போதைய நிலை, விவசாயப் பொருட்களின் முன்னேற்றம் குறித்துக் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. கலந்துரையாடலின் போது, விவசாயப் பத்திரிகையின் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்குக் கிருஷி ஜாகரனால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தளமான 'AJAI' ஐ அமைச்சர் பாராட்டினார்.
வரவிருக்கும் ஆண்டுகளில் விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்கு AJAI ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று அமைச்சர் பாராட்டியுள்ளார். மேலும், மார்ச் 1 முதல் 3, 2023 வரை நடைபெறவுள்ள அக்ரி ஸ்டார்ட் அப் கூட்டுறவு மற்றும் FPO உச்சி மாநாட்டில் பங்கேற்பதாகவும் அவர் உறுதியளித்திருக்கிறார்.
இந்திய வேளாண் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (AJAI) லோகோ மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் ஜூலை 21 அன்று தொடங்கப்பட்டது. லோகோவை மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா வெளியிட்டார். இந்த இணையதளத்தை சர்வதேச விவசாயக் கூட்டமைப்பின் (IFAJ) தலைவர் லீனா ஜோஹன்சன் தொடங்கி வைத்தார். விவசாயம், பால் பண்ணை, தோட்டக்கலை, மீன்பிடி, உணவு உற்பத்தி மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்காக பணியாற்றும் ஊடகப் பணியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் போன்றோருக்காக தேசிய அளவில் இத்தகைய அமைப்பு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர். கே சிங் (ICAR), டாக்டர். SK மல்ஹோத்ரா (ICAR திட்ட இயக்குனர்), Dr. ஜேபி மிஸ்ரா (OSD -கொள்கை, திட்டமிடல் மற்றும் கூட்டாண்மை) & ADG, ICAR), Dr. ஆர்எஸ் குரில் (விசி, மகாத்மா காந்தி தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகம், சத்தீஸ்கர்), கல்யாண் கோசாமி (டிஜி, ஏசிஎஃப்ஐ) மற்றும் விவி சதாமாத்தே (முன்னாள் விவசாயத் திட்டக் குழு ஆலோசகர்) ஆகியோரும் இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர் என்பது நினைவுகூறத்தக்கது.
மேலும் படிக்க
Share your comments