ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும், அவர்களது துணைவியர்களுக்கும் இலவசப் பயண அட்டை வழங்கப்படும் எனத் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என அரசுக்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு சலுகைகள் அளிக்கும் சூழலில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசு இலவசப் பயண அட்டை வழங்கிட வேண்டும் என ஓய்வு பெற்ற ஊழியர்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இன்று இவ்வறிவிப்பு வெளிவந்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கை வைத்த நிலையில் இவ்வறிவிப்பினை தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
அதோடு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ஆம் கட்டப் பேச்சுவார்த்தைக் குரோம்பேட்டை, மாநகர் போக்குவர்த்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
சுமார் 7 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது என்பது நினைவுகூறத்தக்கது.
இந்நிலையில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஓட்டுநருக்கு ரூ. 2,012 என்றும், அதிகபட்சமாக ரூ. 7981 என்றும் நிர்ணயிக்கப்பட்டுக் கையெழுத்தானது. நடத்துனருக்கு குறைந்தபட்சம் ரூ. 1965 எனவும், அதிகபட்சமாக ரூ. 6640 எனவும் உயர்த்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் படிக்க
Share your comments