1. செய்திகள்

தமிழகம்: அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்தோர், இதை புதுப்பித்தீர்களா?

Deiva Bindhiya
Deiva Bindhiya

Applicants for Government Employment in Tamil Nadu, Have you updated this?

தமிழகத்தில் அரசு வேலைக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் லட்சக்கணக்கானோர் பதிவு செய்து, எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். தங்கள் கல்வித்தகுதிக்கு ஏற்ப உரிய அரசு வேலை என்றாவது ஒருநாள் வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதேசமயம் தமிழக அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது ஒருபுறம் இருந்தாலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மீதான நம்பிக்கை இன்னும் குறையவில்லை என்பதே உண்மையாகும். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக, இத்தனை விண்ணப்பங்கள் வந்துள்ளன, என அறிவிப்புகள் மூலம் தெரிகிறது. 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து கொள்ள வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல், கல்வித் தகுதியை சேர்த்தல், திருத்தங்கள் செய்தல் உள்ளிட்டவற்றை ஆன்லைன் வாயிலாகவே மேற்கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

இவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்திருப்போர் குறிப்பிட்ட கால இடைவெளியில், புதுப்பித்தலும் அவசியமாகும். அதாவது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் அந்த பதிவு பயனற்றதாகி விடும். எனவே வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது சிறப்பு கால அவகாசம் அளித்து வருகிறது.

அந்த வகையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். அதாவது, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, பல்வேறு காரணங்களால் தங்கள் பதிவினை 2014, 2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் (01.01.2014 முதல் 31.12.2019 வரை) புதுப்பிக்க தவறியவர்கள் பதிவு மூப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பான அரசாணை வெளியிடப்பட்ட 02.12.2021 முதல் மூன்று மாதங்களுக்கு, அதாவது 01.03.2022 வரை வேலைவாய்ப்புத்துறை இணையம் tnvelaivaippu.gov.in மூலம் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இணையம் வழியாக புதுப்பிக்க இயலாதவர்கள் 01.03.2022க்குள் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

செய்தி:

பூ செடியோ, காய் செடியோ பூக்கள் உதிராமல் காக்க! பெருங்காய மோர் கரைச்சல்!

இல்லையெனில் நேரில் சென்று புதுப்பிக்கலாம். அவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து, போதிய சரீர இடைவெளியை கடைபிடித்தல் அவசியமாகும் என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார். இதனை திருச்சி மாவட்ட இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் பயன்படுத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இணையம் மட்டுமின்றி சிலர் நேரடியாகவும் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று வருவது குறிப்பிட தக்கது.

மேலும் படிக்க:

டிஜிட்டல் முறையில் பிச்சை கேட்கும், டிஜிட்டல் இந்திய குடிமகன்!

English Summary: Applicants for Government Employment in Tamil Nadu, Have you updated this?

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.