சர்வதேச விவசாயப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் (IFAJ) தலைவரும், அர்ஜென்டினாவைச் சேர்ந்த பத்திரிகையாளருமான லினா ஜோஹன்சன், எலிடா தியரி மற்றும் தென்னாப்பிரிக்கப் பத்திரிகையாளர், தொகுப்பாளர் மற்றும் தகவல் தொடர்பு நிபுணர் லிண்டி போத்தா ஆகியோர் கிரிஷி ஜாக்ரன் தலைமையகத்துக்கு வருகை தந்தனர்.
இந்தியன் ஃபெடரேஷன் ஆஃப் அக்ரிகல்சர் ஜர்னலிசம் தலைவரான லீனா, சர்வதேச விவசாயப் பத்திரிகையாளர் கூட்டமைப்புச் சுற்றுப்பயணம் குறித்து இளம் பத்திரிகையாளர்களுக்கு விவரித்தார். அதோடு, விவசாயத் துறையில் இதழியலின் முக்கியத்துவம் பற்றியும் விவரித்தார்.
அதேபோல், லிண்டி போத்தா மற்றும் எலிடா தியரி ஆகியோரும் தங்கள் சுருக்கங்களைப் பகிர்ந்து கொண்டனர். லீனா ஜான்சன் விவசாயத் துறையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
கூடுதலாக, லீனா புகைப்படம் எடுத்தல், செய்தி எழுதுதல், நெருக்கடி தொடர்பு, நிகழ்வு மேலாண்மை மற்றும் எடிட்டிங் ஆகியவற்றிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீனா ஜான்சன் சமீபத்தில் இந்திய வேளாண் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (AJAI) அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் லோகோவை அறிமுகப்படுத்தியவர் என்ற சிறப்பிற்குரியவர். இந்த அமைப்பு விவசாய விழிப்புணர்வுக்காகத் தொடங்கப்பட்டது எனப்து குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டிலிருந்து வந்திருந்த விருந்தினர்களைக் கிரிஷி ஜாக்ரன் அலுவலக ஊழியர்கள் வரவேற்றனர். கே.ஜே. நிகழ்ச்சியுடன், சௌபால் மேடையில் பல்வேறு மாநிலம் சார்ந்த தனித்தனியான மற்றும் தனித்துவமான கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பல்வேறு மாநிலங்களிலிருந்து இந்தியக் கலாச்சாரத்தை விளக்கும் நடனங்கள் இடம் பெற்றன. கிரிஷி ஜாக்ரன் மீடியா இயக்குனர் ஷைனி டொமெனிக், பத்திரிகையாளர் லிண்டி போத்தாவுக்கு இந்தியக் காதணிகளை அணிவித்து வரவேற்றனர் என்பது சிறப்பிறகுரியது.
மேலும் படிக்க
Share your comments