மெடிகட்டாவில் காலேஸ்வரம் அணை உதயமானது. தெலுங்கானா அரசு 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய காலேஸ்வரம் அணையினை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உருவாகும் கோதாவரி நதியானது தெலுங்கானா மாநிலம் வழியாக சென்று கடலில் கலக்கிறது. எனவே கடலில் கலக்கும் நீரினை விவசாகிகள் பயன் படுத்தும் வகையில் இந்த அணை உருவாக்கப்பட்டுள்ளது. சந்திரா சேகர் ராவ் அவர்களின் நீண்ட நாள் கனவான காலேஸ்வரம் அணை மெடிகட்டா எனும் இடத்தில அமைக்க பட்டுள்ளது.
காலேஸ்வரம் அணையின் சிறப்பு
80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 85 மதகுகளை கொண்ட மிக பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. இதன் கொள்ளளவு 16.37 டிஎம்சி ஆகும். 35 கி.மீ வரை தண்ணீரை சேமித்து வைத்து கொள்ளலாம். இந்த அணையிலிருந்து 40 மெகா வாட் மின்சாரத்தை பயன்படுத்தி 11 மோட்டர் மூலம் உபரி நீர் வெளியேற்ற பட உள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய ஏற்று நீர் பாசனம் திட்டமாகும். இவ்வணையில் இருந்து பெறப்படும் நீர், எடுத்து செல்லப்பட்டு மேலும் மூன்று அணைகளில் சேமிக்க பட உள்ளது. இதன் மூலம் 20 ற்கும் அதிகமான நீர் தேக்கங்கள் மூலமாக மாநிலம் முழுவதும் தண்ணீர் விநியோகிக்க பட உள்ளது.
விவசாகிகள் மகிழ்ச்சி
காலேஸ்வரம் திட்டத்தினால் 38 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெற உள்ளது. 13 க்கும் அதிகமான மாவட்டங்கள் பயன் பெற உள்ளது. அது மட்டுமல்லாது இரட்டை நகரமான ஹைதராபாத், செஹந்திரபாத் நகரங்களின் குடிநீர் தேவை இதன் மூலம் பூர்த்தியாகும். இத்திட்டத்தின் மூலம் அம்மாநிலம் தண்ணீர் தேவைக்கு தன்னிறைவு அடைய உள்ளது எனலாம்.
6200 குடும்பங்கள் இதற்காக வேறு இடங்களில் குடியமர்த்த பட்டுள்ளனர். 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 50 ஆயிரம் கோடி அளவிலான பணிகள் நிறைவடைந்துள்ளது. பணிகள் விரைவில் முடிந்து மக்களின் பயன் பாட்டிற்கு வர உள்ளது.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆளுநரான நரசிம்மன், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மகாராஷ்ட்ர முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments