ஆசிய பணக்கார பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் சாவித்ரி ஜிண்டால் முதலிடம் பெற்றுள்ளார். ஆசிய நாடுகள் அளவிலான பணக்கார பெண்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. இதில், இந்தியப் பெண் முதலிடம் பிடித்திருப்பது, நம் நாட்டு பெண்களுக்கு தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.
பணக்கார பெண்கள் பட்டியல் (Richest Women List)
ஆசிய பணக்கார பெண்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில், இந்தியாவின் ஜிண்டால் குழும தலைவர் சாவித்ரி ஜிண்டால் (72 வயது) முதலிடம் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 89 ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதுவரை முதலிடத்தில் இருந்த சீனாவின் யாங் ஹூயன் மூன்றாவது இடத்துக்கு சென்றுள்ளார். இரண்டாம் இடத்தை சீனாவை சேர்ந்த பென் ஹாங்வே பிடித்துள்ளார். ஜிண்டால் குழும தலைவர் ஓ.பி.ஜிண்டால் 2005ல் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பின், குழுமத்தின் தலைவர் பதவியை சாவித்ரி ஏற்றார்.
ப்ளூம்பெர்க் பில்லினர் இண்டக்ஸில் டாப் 10 ஆசிய பணக்காரப் பெண்கள் பட்டியலில் இடம்பிடித்து இந்தப் பெருமையை அவர் வசப்படுத்தியுள்ளார். ப்ளூம்பெர்க் பில்லினர் இண்டக்ஸில் டாப் 10 ஆசிய பணக்காரப் பெண்கள் பட்டியல் வெளியானது. இதில், சாவித்ரி ஜிண்டால் முதலிடம் பிடித்தார். உலோகம், மின் துறையில் உள்ள ஜிண்டால் குழுமத்தின் உரிமையாளர், நிறுவனரின் மனைவி என்ற வகையில் சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு 11.3 பில்லியன் டாலர் என்றளவில் உள்ளது.
மேலும் படிக்க
தமிழகத்தில் டாப் 10 ஏற்றுமதி மாவட்டங்கள்: முதலிடம் பிடித்த மாவட்டம் எது!
Share your comments