ஆட்டோ வாங்க மானியம் அறிவிப்பு, தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை, ரூ.1000-லிருந்து ரூ.3000 ஆக உயர்வு, மின் கட்டணம் செலுத்த ஆதார் கட்டாயம், தொழில் முனைவோர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஆர்பிஐ உடனான ஆலோசனை, பழக்கடைக்குச் சென்ற ஆனந்த் மஹிந்திரா முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: PM Kisan நிதி ரூ.8000 ஆகிறது|மின்மோட்டார் திட்டம்|விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் பரிசு|வேளாண் நிதிநிலை அறிக்கை|பயணிகளுக்கு இலவச உணவு
1. ஆட்டோ வாங்க மானியம் அறிவிப்பு!
தமிழக தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுபவர்களுக்குச் சொந்தமான ஆட்டோ வாங்க்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் வலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுவர்களுக்குச் சொந்தமாக ஆட்டோ வாங்க்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
2. தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.1000-லிருந்து ரூ.3000 ஆக உயர்வு!
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி நலத்திட்ட உதவித்தொகையானது ரூ.1000 -லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் வலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Ration Card: புதிய ரேஷன் கார்டு|நெல் கொள்முதல் நிலையங்கள்|FPO Call Center|பால்பண்ணைத் தொழில்|இ-சந்தை
3. மின் கட்டணம் செலுத்த ஆதார் கட்டாயம்!
மின் அட்டையுடன் ஆதாரை இணைக்க இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. வருகின்ற பிப்ரவரி முதல் ஆதாரை இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்த இயலும் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆதார் எண் இணைக்கும் பணியினை கடந்த நவம்பர் 15-ஆம் தேதி துவக்கப்பட்டது. இது டிசம்பர் 31 வரை இருந்தது. இந்நிலையில் இது இன்னும் 4 நாட்களின் முடிய இருக்கிறது. எனவே இதுவரை ஆதாரை இணைக்காமல் இருப்போர் விரைவில் இணைக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
4. தொழில் முனைவோர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி!
சிறுதானியத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் குறித்தான தொழில் முனைவோர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்றது. இதில் சிறுதானிய பிஸ்கட்ஸ், சத்துமாவு, கேக், லட்டு, உடனடி கலவை, ஐஸ்கிரீம் மற்றும் கார வகைகள் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகள் நடைபெற்றது. இதில் சுமார் 25 பேர் கலந்துகொண்டு பயிறிச் பெற்றனர்.
மேலும் படிக்க: தமிழக விவசாயிகளுக்குப் ரூ.5 லட்சம்|TNPSC வேலைவாய்ப்பு|குடியரசு தினம்|அறநிலையத் துறை|பெட்ரோல் விலை
5. பறவைகள் கணக்கெடுப்புக்கு ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த பின் ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்றும் நாளையும் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் பறவைகளின் கணக்கெடுப்பானது ஜனவரி 28ஆம் தேதி மற்றும் 29ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதே போல நிலப்பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஜன 27 மற்றும் ஜன 28 தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில் அதில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 9444223174 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
6. ஆர்பிஐ உடனான ஆலோசனைக்குப் பிறகு பழக்கடைக்குச் சென்ற ஆனந்த் மஹிந்திரா!
ரிசர்வ் வங்கி உடனான ஆலோசனைக்குப் பிறகு இணைய வழி பணப்பரிவர்த்தனை குறித்து அறிந்துகொண்டதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி உடனான ஆலோசனைக்குப் பிறகு சாலையோரமிருந்த பழக்கடைக்குச் சென்று இணையவழி பணப்பரிவர்த்தனை செய்து பழங்களை வாங்கினார். இது தொடர்பான விடியோவையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
7. உருளைக் கிழங்கு, வெங்காயம் விலை குறைவு!
கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளின் மொத்த விலை குறைந்து இருக்கிறது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் புதிய மொத்த விலை 130 ரூபாய் என்று அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்து இருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் புதிய மொத்த விலை 100 ரூபாய் ஆகும். இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாயாகவும், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 80 முதல் 100 ரூபாயாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
8. கால்நடைகளின் பாதுகாப்பு குறித்து கருத்து பகிர்ந்த மாணவியின் சிந்தனைக்குப் பாராட்டு!
வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், துறையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவி என்.எஸ்.லயாஸ்ரீ-க்கு சமூக நலனுக்காக செய்த செயலை பாராட்டி அங்கீகரிக்கும் விதமாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் துறையூர் MLA எஸ்.ஸ்டாலின்குமாரிடம், இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் காதுகளில் எதிரொலிக்கும் குறிச்சொற்களைப் பொருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். அவரது மனு வருவாய் துறைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து கால்நடை பராமரிப்பு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது பரிந்துரை செல்லுபடியாகும் என ஏற்றுக்கொண்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் சுகுமார், மாணவியின் சமூக சிந்தனையைப் பாராட்ட மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்த நிலையில் மாணவி லயாஸ்ரீ பாராட்டுப் பெற்றுள்ளார்.
9. வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் உள்ளிட்ட தலைமைக்குழு நைஜீரியா வருகை!
வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அபிலக்ஷ் லிகி தலைமையிலான உயர்மட்ட இந்தியக் குழு நேற்று நைஜீரியாவின் தலைநகரான அபுஜா சென்றது. ஒத்துழைப்பு மற்றும் சிறுதானியங்களுக்கான ஆதரவை அடுத்த உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்காக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு அபிலக்ஷ் லிகி தலைமையிலான உயர்மட்ட இந்தியக் குழு நேற்று நைஜீரியாவின் தலைநகரான அபுஜா சென்றடைந்துள்ளது.
மேலும் படிக்க
பருத்தியில் மகசூலை அதிகரிக்க டிப்ஸ்: விவசாய கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்!
ஏற்றுமதி, விதை இருப்பு ஆகியவற்றை அதிகரிக்க உதவும் 3 புதிய கூட்டுறவு நிறுவனங்கள்
Share your comments