அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச் சீட்டு முறையானது விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பேருந்துகளுக்கும் படிப்படியாக வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் தற்பொழுது விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்துள்ள அனைத்து பயணிகளுக்கும் காகிதப் பயணச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் அரசு பேருந்துஅலில் தானியங்கி முறையில் பயணச் சீட்டு வழங்கும் முறை முதல்கட்டமாகச் சென்னை, மதுரை, கோவை ஆகிய போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடைமுறைக்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளி போக்குவரத்துக் கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த தானியங்கி பயணச் சீட்டு முறையினை மெட்ரோ ரயில் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, க்யூஆர் கோடு ஆகியவை மூலம் பயண்ச் சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments