மத்திய அரசின் குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை சார்பில் ஜல்ஜீவன் திட்டமும், தூய்மை இந்தியா திட்டமும் என இரண்டும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்கீழ் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றது. அது குறித்த விரிவான தகவலைத்தான் இப்பதிவு வழங்குகிறது.
மத்திய அரசின் குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை சார்பில் ஜல்ஜீவன் திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைச் சிறப்பாகச் செயல்படுத்தும் மாவட்டங்களுக்கு மாதாந்திர அடிப்படை, காலாண்டு அடிப்படை மற்றும் ஆண்டு அடிப்படையின் என மூன்று காலங்களாகப் பகுத்து ஆய்ந்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது மாதாந்திர விருதுகள் வழங்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்டங்களில் 100 சதவீதத்தை எட்டிய முதல் 3 மாவட்டங்களாக ஹரியானா மாநிலத்தின் மாவட்டங்கள் தேர்வு செய்யப் பெற்றுள்ளன.
75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலான பணிகளுக்குத் தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும், 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையிலான பணிகளுக்குத் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டமும், 3-வது இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. 25 முதல் 50 சதவீத பணிகளுக்காக தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல் இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
100 சதவீதத்தின் பணிகளை முடித்ததற்காக நாமக்கல் மாவட்டம் விருது பெற்றிருக்கிறது. விருதுகளைத் துறையின் செயலாளர் வினி மகாஜன் வழங்கினார். குடிநீர் மற்றும் துப்புரவு பணிகள் தொடர்பாக தேசிய அளவில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டை அடுத்த ஆண்டு நடத்த முடிவு செய்திருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
Share your comments