இந்த ஆண்டு, சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்காக விருது- 2022-2023 வழங்குவதாக தமிழ்நாடு தொட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு, சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்காக விருது- 2022-2023 வழங்குகிறது தமிழ்நாடு தொட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை.
சிறந்த பனையேறும் பனைமர இயந்திரத்தை கண்டுபிடித்து விருது பெற விரும்புவோர் https://www.tnhorticulture.tn.gov.in/palmyarh/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
பனையேறும் இயந்திரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அறிவித்த விதிமுறைகள்.
(1) கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம் பனை மரத்தில் எவ்வித ஆபத்தும் இன்றி எளிதாக ஏறுவதற்கும், பனை நுங்கு மற்றும் பிற பொருட்களை திறம்பட அறுவடை செய்வதற்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும்.
(2) கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம் குறித்து கீழ்க்கண்ட குழுவின் முன்பு செயல்விளக்கம் அளிக்க வேண்டும்.
(3) தோட்டக்கலை பேராசிரியர் (தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்), வேளாண் பொறியியல் பேராசிரியர். (தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்), தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் (மத்திய மற்றும் மாநில திட்டம்), தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தால் நியமிக்கப்படும் அலுவலர் ஒருவர் மற்றும் பனை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயி ஆகியோரைக் கொண்ட குழுவால் சிறந்த பனை ஏறும் இயந்திர கண்டுபிடிப்பாளர் தேர்வு செய்யப்படுவர்.
(4) அத்தகைய இயந்திரம் கண்டுபிடிப்பதற்காகும் மொத்த செலவினம், இயந்திர செயல்திறன், விலையின் உண்மைத் தன்மை மற்றும் இயந்திரத்தின் ஒட்டுமொத்த பயன்பாட்டுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விருது வழங்கப்படும்.
திறம்பட செயல்பட்டு விருதினை பெற விரும்புவோர் விண்ணப்பிக்கவும் மேலும் தகவல்களை அறிந்து கொள்ளவும் https://www.tnhorticulture.tn.gov.in/palmyarh/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டு பனை மரத்தை எளிதில் ஏறுவதற்கு துணையாக கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பனை மரம் ஏறும் கருவியை கண்டுபிடித்துள்ளார். கோவையை சேர்ந்த பட்டதாரி ஸ்ரீவரதன் இதனை உருவாக்கியுள்ளார். திமுக எம்.பி.கனிமொழி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் சென்று கருவியை ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022-2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு உழவர் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பனை மரத்தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதில், பனை மேம்பாட்டு இயக்கம் - பனை மதிப்பு கூட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தமிழகத்தில் ஐந்து கோடி பனை மரங்கள் உள்ளதாகவும், அதனை நம்பி மூன்று லட்சம் குடும்பங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 10 லட்சம் பனை விதைகள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Share your comments