1. செய்திகள்

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 சரிவு

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.இந்நிலையில் இன்றைய தங்கம் விலை என்னவாக இருக்கும் என்பதில் மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். எனவே இன்றைய தங்கம் விலை அறிந்திடுங்கள்.

பட்ஜெட்டில் விதிக்கப்ப்டட வரி காரணமாக, ஒரு சவரன் தற்போது 44 ஆயிரத்தைத்தாண்டியிருக்கிறது.

எதிர்பார்த்தபடியே இந்த முறை மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட சில பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

பொதுவாக, மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆடம்பர பொருட்களின் விலை உயர்வது வழக்கமாக உள்ளது.

இம்முறையும் நாட்டின் தங்க பிரியர்களுக்கு பட்ஜெட்டில் அதிர்ச்சி அளிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தங்கம், வெள்ளி, வைரம் விலை உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி புதன்கிழமை காலை தங்கத்தின் விலை உயர்ந்தது. அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் ஏற்றம் காணப்பட்டது

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்தது. எனினும் ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் தங்கம் விலை குறைந்தது. 29, 30 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையானது.

நேற்று தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 720 ரூபாய் வரை உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 44000-ஐ தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிற்பகல் நிலவரப்படி சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் 5505 ரூபாயாகவும், ஒரு சவரன் 44 ஆயிரத்து 40 ரூபாயாகவும் விற்பனை ஆனது.

நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.520 சரிந்துள்ளது.
ஒரு சவரன் தங்கம் 520 ருபாய் குறைந்து 43,520 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இது தங்கப்பிரியர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் ஓரூ நற்செய்தியாக அமைந்துள்ளது.

வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய (Find out the price of gold at home)

வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.

மேலும் படிக்க

தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது!

விலையை தக்கவைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி

English Summary: Jewelery prices in Chennai fell by Rs.520 Published on: 03 February 2023, 03:26 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.