வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு ரூ.6 லட்சம் பரிசு தரப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளூர் கண்டுபிடிப்பு ஆகிய மூன்று இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு ஊக்குவித்து பாராட்டி பரிசளிக்கும் திட்டத்தினை 2021-2022ம் ஆண்டில் அறிமுகப்படுத்தி ரூ.6 லட்சம் நிதியினை ஒதுக்கியது என தெரிவித்துள்ளார். மேலும் மதுரை மாவட்டத்திலும் அரசு சார்பாக புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அறிந்திட பதிவை தொடருங்கள்.
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டமானது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படவுள்ளது. சிறந்த புதிய தொழில் நுட்பம் மற்றும் புதிய வேளாண் இயந்திரங்கள் கண்டு பிடிப்பு திட்டத்தில், மாநில அளவில் தலா ரூ.1 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.2 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் 2022-2023-க்கு மதுரை, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட அளவில் குழு அமைத்து நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. எனவே, நமது மாவட்டத்தில் தகுதியுடைய விவசாயிகள் பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து 2050 சிறப்பு பஸ்கள் நாளை இயக்கம்
இத்திட்டத்தில் பயன்பெற தங்களகு விவரங்களை உழவன் செயலியில் பதிவேற்றம் செய்திட வேண்டும், பங்கேற்பாளர்கள் விவசாயியாக இருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. விவசாயியின் கண்டுபிடிப்பானது அனைத்து விவசாயிகளும் எளிதில் உபயோகப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். தொழில் நுட்ப கண்டுபிடிப்பை மதிப்பாய்வு செய்து இதற்கான குறிப்புரை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடம் பெறப்பட வேண்டும். பதிவு கட்டணம் ரூ.100/- மட்டுமே.
கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து 2050 சிறப்பு பஸ்கள் நாளை இயக்கம்
தொழில்நுட்ப கண்டுபிடிப்பானது அவரது சொந்த கண்டுபிடிப்பாக மட்டுமே இருக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம் என மதுரை, வேளாண்மை இணை இயக்குநர், தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
விவசாயிகள் உடனே செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து 2050 சிறப்பு பஸ்கள் நாளை இயக்கம்
Share your comments