1. செய்திகள்

கொரோனா மருத்துவ சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரைக் கடன் -வங்கிகள் அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Banks announce loans of up to Rs 5 lakh for corona medical treatment

பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ள உதவும் வகையில், மாத சம்பளதாரர்களின் கொரோனா சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என வங்கிகள் அறிவித்துள்ளன.

ரிசர்வ் வங்கி (Reserve Bank)

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஏற்கனவே அறிவித்திருந்தது.

7.5% வட்டி (7.5% interest)

இதன்படி, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை ஏற்படுத்த அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் (ECGLS) கீழ் ரூ.2 கோடி வரை அதிகபட்சம் 7.5 சதவீத வட்டியில் அளிக்கப்படுகிறது.

ரூ.100 கோடி (Rs.100 crore)

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதை விரிவாக்கம் செய்ய விரும்பினால் அதிகபட்சம் ரூ.100 கோடி வரை வழங்கப்படும்.

அவசரகால நிதி (Emergency funding)

கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிக்க ரூ.50 ஆயிரம் கோடி நிதியை அவசரகால மருத்துவ சேவைக்காக ஒதுக்கீடு செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

தனிப்பிரிவு (Individual)

இதைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகள் கொரோனா சிகிச்சை கடன் என தனி பிரிவுத் தொடங்கப்பட்டுத் தேவைப்படுபவர்களுக்கு கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளன.

ரூ. 5 லட்சம் வரைக் கடன் (Rs. Loans up to Rs 5 lakh)

கொரோனா மருத்துவ சிகிச்சைக்கு தனி நபர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.

பிணைத் தேவையில்லை (No bail required)

எனவே மாத சம்பளம் பெறுவோர் இதர பிரிவினர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரும் இத்தகைய கடன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கடனுக்கு எவ்வித பிணையும் அளிக்கத்தேவையில்லை.

கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிக்க உதவும் விதமாக பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைந்து தேவையான நிதி வழங்கும் விதமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க...

கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு

English Summary: Banks announce loans of up to Rs 5 lakh for corona medical treatment Published on: 04 June 2021, 08:18 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.