1. செய்திகள்

உக்ரைன் போர் எதிரோலியால் உயர்ந்த தங்கம் விலை, இரண்டாவது நாளாக சரிவு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Because of ukraine crises gold price hiked, 2nd day in a row gold price decreased!

உக்ரைனில் போர்களம் பூண்டுள்ளதால், இந்தியா பங்குச் சந்தை திடீரென பெரும் சரிவை கண்டது. மேலும் தங்க விலையும் அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. முன்பே கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் தங்கத்தின் விலை பல மாற்றங்கள் காணப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, இன்றும் தங்கம் விலை குறைந்திருக்கிறது.

ஒரு நாள் போல் ஒரு நாள் இருப்பதில்லை என்ற பழைய சொலவடையுள்ளது. அந்த வகையில், தங்க விலை ஒரு நாள் குறைந்தால், அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்ந்துவிடுகிறது. மேலும் உக்ரைனில் காணப்படும் போர் சூழலின் எதிரோலி இந்தியாவிலும் காணப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக இதுவரை கண்டிடாத அளவிற்கு தங்கம் விலை உயர்ந்தது. அந்த வகையில் இன்று தங்கம் விலை சரிவை கண்டிருக்கிறது. விலை நிலவரம் அறிந்துக் கொள்ளவும்.

சென்னையில் இன்று (பிப்ரவரி 26, 2022) ஒரு கிராம் (22 கேரட்) தங்கத்தின் விலை ரூ. 4,738 ஆக விற்பனையாகிறது. அதே நேரம், (24 கேரட்) ஒரு கிராம் தங்கம் ரூ. 5,170 ஆக உள்ளது. 8 கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கம் 504 ரூபாய் குறைந்து ரூ. 37,904 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மேலும், 8 கிராம் (24 கேரட்) ஆபரணத் தங்கம் 536 ரூபாய் குறைந்து ரூ. 41,360 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

நேற்று 5,237 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் (24 கேரட்) தங்கம் இன்று 5,170 ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரம், நேற்று 38,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் (22 கேரட்) தங்கம் 504 ரூபாய் குறைந்து 37,904 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி மட்டும் பத்து கிராம் தங்கத்தின் 1500 ரூபாய் வரை உயர்ந்தது குறிப்பிடதக்கது. சென்ற வாரத்தின் தங்கம் விலை கீழே காணவும்.

கடந்த வாரத்தின் 10 கிராம் தங்கம் விலை நிலவரம்

Feb 26, 2022 22 Carat ₹47,380 (-630) (24 Carat) ₹51,700 (-670 )
Feb 25, 2022 22 Carat ₹48,010(-1500)(24 Carat) ₹52,370 (-1640 )
Feb 24, 2022 22 Carat ₹49,510 (2160) (24 Carat) ₹54,010 ( 2350 )
Feb 23, 2022 22 Carat ₹47,350 (-270)  (24 Carat) ₹₹51,660 (-340)
Feb 22, 2022 22 Carat ₹47,620 (350 )  (24 Carat) ₹52,000 ( 430 )
Feb 21, 2022 22 Carat ₹47,270 (-50 )  (24 Carat) ₹51,570 ( -50 )

தங்கம், மக்களின் இயல்பு வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாகும். விவசாயிகளும் தங்கம் வைத்து கடன் பெறுவதை எளிதென நம்புகின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி சிறு தொழில் முதல் பெருந் தொழில் செய்வோர் வரை அனைவரும் தங்கத்தில் செய்யும் முதலீடு மற்றும் தங்கத்தின் மீது வாங்கும் கடன் அனைத்தையும் எளிது என நம்புகின்றனர். ஆகவே இதன் விற்பனை இன்றளவும் இன்றியமையாதது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)

வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.

மேலும் படிக்க: 

இந்திய அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும், விவசாய மானியங்கள் தொகுப்பு

வெந்தயம்: சரும பிரச்சனைகளுக்கான தீர்வு! ஆச்சரியம் தரும் வீட்டுக்குறிப்புகள்!

English Summary: Because of ukraine crises gold price hiked, 2nd day in a row gold price decreased! Published on: 26 February 2022, 12:04 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.