மனிதர்கள் வாழும் பகுதியில் யானைகள் நுழையாமல் தடுப்பதற்கு நீடித்த கால அடிப்படையில் பயன் தரக் கூடிய தீர்வை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
உலக யானைகள் தினத்தை (World Elephant Day) ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு விலங்குகள் வருவதைத் தடுக்கும் நோக்கில் காடுகளிலேயே விலங்குகளுக்கு உணவும், தண்ணீரும் கிடைக்கச் செய்வதற்கு அரசு முழு வீச்சில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்றார்.
விலங்குகளைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை
யானைகள் மற்றும் பிற விலங்குகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் எடுப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்றும் அதற்காக உடனடிப் பலன் தரக் கூடிய, நடைமுறை சாத்தியமான, குறைந்த செலவிலான நடைமுறைகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
வன அலுவலர்களின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே குறுக்கீடுகள் (Human-Elephant Conflict) வராமல் தடுத்து, மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு, மனிதர்களும், யானைகளும் இயைந்து வாழ்வதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டியது முக்கியமானதாக உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு. பாபுல் சுப்ரியோ, நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். யானைகளைக் காப்பாற்ற வேண்டியதும், யானைகள் - மனிதர்கள் இடையே குறுக்கீடுகள் ஏற்படுவதைக் குறைப்பதும் அவசியமானவையாக உள்ளன என்றார் அவர். அப்பாவி விலங்குகளைக் கொல்வதை அரசு சகித்துக் கொள்ளாது என்று கூறிய அவர், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே குறுக்கீடுகள் வருவதைத் தடுப்பதற்கு சிறந்த நடைமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தும் என்று தெரிவித்தார்.
இலக்கை மிஞ்சிய குறுவை சாகுபடி - குவியும் நெல் மூட்டைகள்!
நிகழ்ச்சியில், இந்தியாவில் மனிதன் - யானைகள் குறுக்கீடுகளைக் கையாள்வதில் சிறந்த நடைமுறைகள்'' (Best practices of Human-Elephant Conflict Management in India) என்ற புத்தகத்தை இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வெளியிட்டார். மனிதர்கள் - யானைகள் இடையே குறுக்கீடுகள் வருவதைக் குறைப்பதற்கு, அந்தந்தப் பகுதிகளின் தன்மைக்கு ஏற்ற நடைமுறைகளைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டியாக இந்தப் புத்தகம் இருக்கும்.
மேலும் படிக்க....
வியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களும் PM SVANidhi திட்டத்தில் பயன்பெறலாம்!!
RBI : தங்க நகைகளுக்கு இனி அதிக கடன் (90% வரை) பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Share your comments