Krishi Jagran Tamil
Menu Close Menu

அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை- மக்களே உஷார்!!

Monday, 10 August 2020 03:19 PM , by: Daisy Rose Mary
தமிழகத்தில் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும் பிற மாவட்டங்ளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாகத் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீலகிரி. கோவை, தேனி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்பு

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தற்கு திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை 

கேரளா- கர்நாடகா, கோவா கடலோர பகுதிகள், லட்சதீவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு அரபிக்ககடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீச  வாய்ப்புள்ளதால் அந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

அணைகளின் நீர்மட்டம் உயர்வு 

இதனிடையே தொடர் மழை காரணமாகத் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து (Dam level increases) வருகிறது. குறிப்பாக மேட்டூர் அணை, முல்லைப்பெரியாறு அணை, பவானிசாகர் அணை, ராம நதி அணை, சோத்துப்பாறை அணை உள்ளிட்ட அணைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது, இதனால் ஒரு சில அணைகளில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சில  பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க....

இலக்கை மிஞ்சிய குறுவை சாகுபடி - குவியும் நெல் மூட்டைகள்!

வியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களும் PM SVANidhi திட்டத்தில் பயன்பெறலாம்!!

RBI : தங்க நகைகளுக்கு இனி அதிக கடன் (90% வரை) பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Rain Southwest Monsoon தென்மேற்கு பருவமழை மழை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
English Summary: Chance of heavy rain in most districts of Tamil Nadu Says IMD Chennai

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. வேளாண் இளம் அறிவியல் படிப்பு- விண்ணப்பிக்க வரும் 5ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!
  2. உயருகிறது ரயில் கட்டணம்- பயணிகளுக்கு அதிர்ச்சி!
  3. காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்கத் தொகை!
  4. தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
  5. பண்டிகை காலத்தை முன்னிட்டு சாமந்தி நாற்றுகள் விற்பனைக்கு தயார்- விவசாயிகள் கவனத்திற்கு!
  6. ATM கார்டு இல்லாமல் ATMல் பணம் எடுக்கும் வசதி- அறிமுகப்படுத்தியது SBI!
  7. சின்ன வெங்காயத்தின் விலை முன்னறிவிப்பு- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணிப்பு!
  8. 3 நாட்களில் 1.26 லட்சம் மரக்கன்றுகள் - நடவு செய்த விவசாயிகள்
  9. 100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு- பெண்களுக்கு வாய்ப்பு!
  10. அமெரிக்க படைப்புழுவைக் கட்டுப்படுத்த ரூ.2000 மானியம் - விவசாயிகள் பதிவு செய்ய அழைப்பு!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.