தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக மந்த நிலையில் இருந்த விவசாய பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற தொடங்கியுள்ளன. தேர்தல் பிரச்சார பணிகளுக்கு சென்றிருந்து கூலித் தொழிலாளர்கள் மீண்டும் அவர்தம் பணிகளுக்கு திரும்பியுள்ளனர்.
தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
தமிழக சட்டசபைக்கான தேர்தலுக்கான வாக்குபதிவு நேற்று நடைபெற்றது. தேர்தல் பிரச்சார பணிகள் காரணமாக கடந்த ஒரு மாதமாக விவசாய பணிகளுக்கு கூலி தொழிலாளர்கள் செல்லவில்லை. தேர்தலின் போது தங்கள் கட்சியின் பலத்தை காட்டும் வகையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரசார கூட்டங்களில் அதிகளவு கூலி ஆட்களை திரட்டுவது வழக்கம்.
பிரச்சார பணிகளில் கூலித் தொழிலாளர்கள்
பொள்ளாச்சி தொகுதியில் இத்தேர்தலில் கடுமையான போட்டி நிலவியதால் பிரதான கட்சிகள் தங்களின் பிரச்சார கூட்டங்களுக்கு ஆட்களை திரட்டுவதில் தீவிரம் காட்டின. கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற உச்சகட்ட வாக்கு சேகரிப்பு மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்காக விவசாய கூலித் தொழிலாளர்களை சென்றுவிட்டனர்.
மீண்டும் பணிக்கு திரும்பிய தொழிலாளர்கள்
இதனால் விவசாயத்திற்கு போதிய கூலி ஆட்கள் கிடைக்காமல் பலரும் தவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று தமிழக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுப்பெற்றதை தொடர்ந்து, விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் மெல் மெல்ல திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் ஒரு வாரமகா மந்த நிலையில் இருந்த விவசாய பணிகள் தற்போது தீவிரம் கண்டுள்ளது.
Share your comments