காரைக்கால் மீனவர்களுக்கு ஜூன் மாதத்திற்குள் பயோமெட்ரிக் பதிவு செய்து கடலில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும். மீன்பிடிக்கச் செல்பவர்கள் ஒவ்வொரு முறை கடலுக்குச் செல்லும்போதும் தங்களைப் பதிவு செய்யும்படி பயோமெட்ரிக் பதிவு முறை நடைமுறைப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியகையுள்ளது.
கடலில் அனுமதியின்றி மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சியில், காரைக்கால் நிர்வாகமும் மீன்வளத்துறையும் இணைந்து ஆண்டு மீன்பிடி தடைக்காலம் முடிவடையும் ஜூன் மாதத்திற்குள் மீனவர்களுக்குப் பயோமெட்ரிக் பதிவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், பதினொரு மீனவ ஊராட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், மீன்வளத் துறை அலுவலர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், படகுகள் மூலம் மது, போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மீனவ சமுதாயத்தின் முன்முயற்சியின் அவசியத்தை வலியுறுத்தினர்.
மீன்பிடிக்கச் செல்பவர்கள் ஒவ்வொரு முறை கடலுக்குச் செல்லும்போதும் தங்களைப் பதிவு செய்யும்படி பயோமெட்ரிக் பதிவு முறையை அமல் செய்ய உள்ளதாகவும், அவர்களின் தரவுகள் சேமிக்கப்பட்டு மீன்பிடிக்கச் சென்றவர்களைக் கண்காணிக்கவும், அவர்களா என்பதை அறியவும் பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) கடப்பதைத் தவிர்க்குமாறு மீனவப் பிரதிநிதிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் கடலோர காவல்படை போன்ற சட்ட அமலாக்க அமைப்புகளால் அடையாளம் காணக்கூடிய வகையில், மீனவர்கள் தங்கள் இயந்திர படகுகளில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
அவர்கள் தங்கள் கப்பல்களுக்குப் பச்சை வர்ணம் பூச வேண்டும் மற்றும் அடையாள நோக்கங்களுக்காக வெளிப்புற மேலோட்டத்தில் பெயர் மற்றும் பதிவு விவரங்களைக் காண்பிக்க அறிவுறுத்தினர். மேலும் ஏல நேரத்தை நள்ளிரவு 1 மணி முதல் 3 மணி வரை ஒத்திவைப்பது குறித்தும் அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் ஆலோசனை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க
Aavin: ஒரு நாளைக்கு 70 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு!
Share your comments