1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான காலை சிற்றுண்டி திட்டத்தை செப்டம்பர் 15ல், மதுரையில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.
காலை சிற்றுண்டி திட்டம் (Breakfast scheme)
1,545 அரசு துவக்கப் பள்ளிகளில் 1,14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித்திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் சென்னை உட்பட 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தால் பலன்பெறுவர். காலை சிற்றுண்டி திட்டத்திற்கு ரூ. 33.56 கோடி நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான காலை சிற்றுண்டி திட்டத்தை செப்டம்பர் 15ல், மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கடந்த ஜூலை மாதத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த திட்ட செயல்பாட்டை கண்காணிக்க சமூக நலன், ஊரக வளர்ச்சி, நகர்புறம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக் கல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், உணவு பாதுகாப்பு துறை ஆகிய அதிகாரிகள் அடங்கிய குழு மாநில, மாவட்ட, பள்ளி அளவில் அமைக்க வேண்டும்.
மேலும் படிக்க
Share your comments