அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் நடைமுறை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் காணலாம்.
அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். இதில் முதலாவதாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூரக் கிராமங்களில் இருக்கின்ற பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குச் சிற்றுண்டி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
முதல் நிலையில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட இருக்கிறது. 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியர்களுக்கும், 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
அரசு தொழிலாளர்களுக்கும் அவர்களது துணைவியர்களுக்கும் இலவசப் பயண அட்டை அறிவிப்பு!
Share your comments