1. செய்திகள்

Breaking News: இனி வாங்க முடியாது தங்கம், விலையில் திடீர் மாற்றம்

T. Vigneshwaran
T. Vigneshwaran
Gold Price Today

தந்தேரஸ்-தீபாவளியின் போது, ​​தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்றம் இருந்தது. வெள்ளியன்று, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.570 ஆகவும், வெள்ளி கிலோவுக்கு ரூ.1700 ஆகவும் பதிவானது.

வெள்ளியன்று, 999 தூய்மையான தங்கத்தின் விலை  10 கிராமுக்கு ரூ.47,702 ஆகவும், தங்கம் மற்றும் வெள்ளியின் விலையைக் கூறும் இணையதளமான ibjarates.com இல் 995 தூய்மையான தங்கத்தின் விலை  10 கிராமுக்கு ரூ.47,511 ஆகவும் இருந்தது. வெள்ளியைப் பற்றி பேசுகையில், இங்கு 999 தூய்மையான வெள்ளியின் விலை ரூ.63,551 ஆக பதிவு செய்யப்பட்டது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையை வெளியிடும் மற்றொரு இணையதளமான Goodreturns.in இன் படி, வெள்ளிக்கிழமை, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.47,250 ஆக இருந்தது.

பண்டிகை முடிந்து, இன்று சந்தை துவங்கியபோதும் தங்கத்தின் ஏற்றம் தொடர்ந்தது. இருப்பினும், இந்த அதிகரிப்பு மிகவும் மிதமானதாகவே காணப்படுகிறது.

குட் ரிட்டர்ன்ஸ் படி, தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை (22 காரட்) முந்தைய வாரத்தை விட சற்று அதிகரித்து ரூ.4726க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய்மையான தங்கத்தின் விலை ரூ.51,560 ஆக உள்ளது.

இன்றைய தங்கத்தின் விலை (22 காரட்) ibjarates.com இல் ஒரு கிராம் ரூ.4370 என்றும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4770 என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு நகரங்களில் தங்கத்தின் இன்றைய விலையைப் பற்றி பேசினால், 22 காரட் தங்கம் புதுதில்லியில் ரூ.47,260 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.47,510 ஆகவும், மும்பையில் ரூ.46,220 ஆகவும், சென்னையில் ரூ.45,420 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க:

தங்கத்தின் விலையில் கடும் சரிவு! 8300 ரூபாய் குறைந்துள்ளது!

மலிவான தங்கம் வாங்க வாய்ப்பு!

English Summary: Breaking News: Gold can no longer buy, sudden rise In price Published on: 08 November 2021, 02:26 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.