எல்லை பாதுகாப்பு படையில் (BSF - Border Security Force) காலியாக உள்ள 228 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் BSF அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
எல்லைப் பாதுகாப்பு படையில், எஸ், ஏஎஸ்ஐ மற்றும் பிற பதவிகளுக்கு காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் bsf.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பொறியியல் சார்ந்த கேடருக்கு வரும் 23ம் தேதி வரையும், குரூப் சி பதவிகளுக்கு அக்டோபர் 28ம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம்.
பதவி வாரியான காலிப் பணியிடங்கள்
-
கான்ஸ்டபிள் கேடர் (Tradesman) - 75 பணியிடங்கள்
-
குரூப் -பி பொறியியல் கேடர் - 52 பணியிடங்கள்
-
குரூப் - சி ஏர் விங் கேடர் - 22 பணியிடங்கள்
-
குரூப் - சி - 64 பணியிடங்கள்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாட்கள்
-
பொறியியல் கேடர் - அக்.15, 2020
-
பொறியியல் கேடர் (குரூப்-பி, ஏர்-விங் மற்றும் கான்ஸ்டபிள்) - அக்.23, 2020
-
குரூப் -சி - அக்.28, 2020
தேர்வு முறைகள்
-
கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் - PST, PET சான்றிதழ் சரிபார்ப்பு, டிரேட் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை
-
குரூப்-பி பொறியியல் - எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, செய்முறை தேர்வு, மருத்துவ பரிசோதனை
-
குரூப்-சி ஏர்-விங் - எழுத்துத் தேர்வு, PST, PET சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
-
குரூப்-சி - எழுத்துத் தேர்வு, PST, PET சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
-
பொறியியல் கேடர் - எழுத்துத் தேர்வு
தகுதி வரம்பு
கல்வி மற்றும் வயது வரம்பு குறித்த விபரங்களை விண்ணப்பதாரர்கள் நேரடியாக எல்லை பாதுகாப்பு படையின் இணையளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும். BSF இணையளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
சம்பள வரைமுறை
தேர்வு செய்யப்படும் நபர்கள், அவர்களின் பதவி பொறுப்புகளுக்கு ஏற்ப ரூ.21,700 முதல் ரூ.1,42,400 வரை வழங்ப்படும். மேலும் தகவல்களுக்கு எல்லை பாதுகாப்பு படை இணையதளத்தை பார்வையிடவும். : https://bsf.gov.in/
மேலும் படிக்க...
தீபாவளி பரிசாக ரேஷன் கார்டுக்கு ரூ.2,000 வழங்க அரசு முடிவு?
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
PM Kisan திட்டத்தின் 7வது தவணை விரைவில்! விவசாயிகளே இன்றே விண்ணப்பித்திடுங்கள்!
Share your comments